/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பனப்பட்டியில் தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்னை தீர்வு காண மக்கள் வலியுறுத்தல்
/
பனப்பட்டியில் தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்னை தீர்வு காண மக்கள் வலியுறுத்தல்
பனப்பட்டியில் தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்னை தீர்வு காண மக்கள் வலியுறுத்தல்
பனப்பட்டியில் தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்னை தீர்வு காண மக்கள் வலியுறுத்தல்
ADDED : டிச 30, 2025 07:24 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி - கோவை ரோட்டில் கட்டப்படும் பஸ் ஸ்டாண்டுக்கு, மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் வைக்க வேண்டும், என பா.ஜ.வினர், சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து வலியுறுத்தினர்.
பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் பா.ஜ. மாவட்ட பொதுச் செயலாளர் துரை, நகர பா.ஜ. தலைவர் கோகுல்குமார் மற்றும் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், 'பொள்ளாச்சி - கோவை ரோட்டில் கட்டப்பட்டு வரும் பஸ் ஸ்டாண்டை, பொள்ளாச்சியில் இருந்து நீண்ட துாரத்துக்கு செல்லும் ஆம்னி பஸ் நிறுத்தமாக மாற்ற வேண்டும்.இதனால், பொள்ளாச்சி நகரில் இரவில் பெருமளவு போக்குவரத்து நெரிசல் குறையும். அந்த பஸ் ஸ்டாண்டுக்கு மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் வைக்க வேண்டும்,' என, வலியுறுத்தியுள்ளனர்.
ஹிந்து முன்னணி நிர்வாகிகள் கொடுத்த மனுவில், 'பொள்ளாச்சி நகராட்சிக்கு சொந்தமான ஹிந்துக்கள் மயானம், உடுமலை ரோடு மரப்பேட்டை பகுதியில் உள்ளது. மயானத்தில் உள்ள புதர்களை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும். அதே போன்று முன்பகுதியில் ஆம்புலன்ஸ் வாகனங்களின் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்,' என, குறிப்பிட்டுள்ளனர்.
பனப்பட்டி பகுதி மக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
பனப்பட்டியில், 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு, அம்பராம்பாளையம் கூட்டுக்குடிநீர் வாயிலாக குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. கடந்த, இரண்டு ஆண்டுகளாக சரியான அளவில் குடிநீர் வினியோகம் இல்லை.
இது குறித்து, பலமுறை கோரிக்கை விடுத்தும் பலன் இல்லை. கிராமத்துக்கு மாதம் தோறும் குறைந்த பட்சமாக, 6 லட்சம் லிட்டர் தண்ணீர் கொடுப்பதாக கிராம சபை கூட்டத்துக்கு வந்த குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் உறுதியளிக்கின்றனர். ஆனால், அதில் பாதியளவு குடிநீர் கூட வழங்குவதில்லை.
கடந்த, இரண்டு மாதங்களாக குடிநீர் வினியோகமில்லை. விலைக்கு தண்ணீர் வாங்கி பயன்படுத்தும் அவலம் உள்ளது. 10 கி.மீ. தொலைவில் உள்ள பெரிகுயிலி, வாரப்பட்டி, போகம்பட்டி கிராமங்களுக்கு சென்று குடிநீர் பிடித்து வருகின்றனர்.
குடிநீர் பற்றாக்குறையால் உப்பு நீரை பயன்படுத்துகிறோம். இதே நிலை நீடித்தால் குடிநீருக்காக குடும்பத்துடன் வேறு ஊருக்கு குடிபெயரும் அபாயம் உள்ளது. இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்துள்ளனர்.

