/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
/
குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
ADDED : பிப் 20, 2024 05:51 AM
கோவை: மணியகாரம்பாளையம் பகுதியில் ஆய்வு செய்த மேயர், கமிஷனர் ஆகியோர் குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்குமாறுஉத்தரவிட்டனர்.
மாநகராட்சி வடக்கு மண்டலம், 12வது வார்டு மணியகாரம்பாளையம் பகுதியில் துாய்மை மற்றும் குடிநீர் பணிகள் குறித்து மேயர் கல்பனா, கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, அப்பகுதி மக்கள் குப்பையை தரம் பிரித்து தர, விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு துாய்மை பணியாளர்களை அறிவுறுத்தினர்.
தொடர்ந்து, நஞ்சை கவுண்டன்புதுாரில்நடந்துவரும் பில்லுார் குடிநீர் திட்ட அபிவிருத்தி பணிகளையும், ரங்கா நகரில், 24 மணி நேர குடிநீர் திட்ட பணிகளையும் விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
11வது வார்டு சிவசக்தி நகர், மாருதி நகரில்புதிதாக தார் ரோடு அமையும்இடத்தையும் ஆய்வு செய்தனர். உதவி கமிஷனர் ஸ்ரீதேவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

