/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெள்ளலுார் குப்பை கிடங்கு வழக்கில் 3 மாத அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
/
வெள்ளலுார் குப்பை கிடங்கு வழக்கில் 3 மாத அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
வெள்ளலுார் குப்பை கிடங்கு வழக்கில் 3 மாத அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
வெள்ளலுார் குப்பை கிடங்கு வழக்கில் 3 மாத அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
ADDED : டிச 12, 2025 05:04 AM
கோவை: கோவை நகர் பகுதியில் சேகரமாகும் குப்பை, வெள்ளலுார் கிடங்கில் கொட்டுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பதால், குறிச்சி - வெள்ளலுார் மாசு தடுப்பு கூட்டுக்குழு செயலாளர் மோகன் தொடர்ந்த வழக்கு, தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் நடந்து வருகிறது. நீதிபதி புஷ்பா சத்யநாராயணா முன் இவ்வழக்கு சில நாட்களுக்கு முன் விசாரணைக்கு வந்தது.
மாநகராட்சி தரப்பில் உதவி நகர் நல அலுவலர் பூபதி, உதவி பொறியாளர்கள் ஜீவராஜ், நடராஜ், மனுதாரர் தரப்பில் மோகன் ஆகியோர் ஆஜராகினர். தகவல் அறியும் உரிமை சட்டத்தில், மாசுக்கட்டுப்பாடு வாரியம் சமர்ப்பித்த அறிக்கை நகல் பெறப்பட்டு, தாக்கல் செய்யப்பட்டது.
அதில், 'கிடங்கில் 90 சதவீத குப்பை கலந்து கிடக்கிறது. நாளொன்றுக்கு திறந்தவெளியில் 110 டன் குப்பை கொட்டுவது தொடர்கிறது. பழைய குப்பையை 'பயோமைனிங்' முறையில் அழிப்பது சரியாக நடைபெறவில்லை. இன்னொரு குப்பை மேடு உருவாகக் கூடாது என அறிவுறுத்தியும் கூட, பல இடங்களில் தொடர்ந்து குப்பை கொட்டப்படுகிறது' என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
செப். - அக். - நவ. மாதங்களில் வெள்ளலுார் கிடங்கில் மாநகராட்சி மேற்கொண்ட மேம்பாட்டு பணிகள் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய பசுமை தீர்ப்பாயம் அறிவுறுத்தியது. அடுத்தாண்டு ஜன. 12க்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

