/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தெற்கு ரோட்டரி கிளப் சார்பில் பேரூரில் பஸ் ஸ்டாப் நிழற்கூரை!
/
தெற்கு ரோட்டரி கிளப் சார்பில் பேரூரில் பஸ் ஸ்டாப் நிழற்கூரை!
தெற்கு ரோட்டரி கிளப் சார்பில் பேரூரில் பஸ் ஸ்டாப் நிழற்கூரை!
தெற்கு ரோட்டரி கிளப் சார்பில் பேரூரில் பஸ் ஸ்டாப் நிழற்கூரை!
ADDED : பிப் 14, 2024 01:42 AM
பேரூர்;'தினமலர்' நாளிதழில் வெளியான செய்தியையடுத்து, பேரூரில் பயணியர் நிழற்கூரை அமைத்துத்தர, தெற்கு ரோட்டரி கிளப் முன்வந்துள்ளது.
தெலுங்குபாளையம் பிரிவு, பேரூர், தீத்திபாளையம் பிரிவு, மாதம்பட்டி, தண்ணீர் பந்தல் என, பல கிராமங்களில் பஸ்ஸ்டாப் நிழற்கூரை இல்லை, என்பது குறித்தும், இதனால் பயணிகள், பள்ளி மாணவ, மாணவியர் கடும் சிரமத்துக்குள்ளாவது குறித்தும், 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து, பேரூரில் ஒரு பஸ் ஸ்டாப்பில், நிழற்கூரை அமைத்துத்தர கோவை தெற்கு ரோட்டரி கிளப் முன்வந்துள்ளது.
இதன் தலைவர் ராஜசேகரன் கூறுகையில், ''கிளப் சார்பில், பேரூர் பகுதியில் நிழற்கூரை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணி விரைவில் துவக்கப்படும். சிறந்த முறையில் நிழற்கூரை அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்படும்,'' என்றார்.