/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மான் வேட்டையாடிய ஒடிசா வாலிபர் கைது
/
மான் வேட்டையாடிய ஒடிசா வாலிபர் கைது
ADDED : செப் 13, 2025 01:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வால்பாறை:வால்பாறையில், சுருக்கு கம்பி வைத்து மான் வேட்டையாடிய ஒடிசா தொழிலாளியை வனத்துறையினர் கைது செய்தனர்.
கோவை மாவட்டம், மானாம்பள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட, கல்யாணப்பந்தல் எஸ்டேட் பகுதியில், மானை வேட்டையாடியதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. வனச்சரக அலுவலர் கிரிதரன் தலைமையிலான வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர்.
அதில், கல்யாணப்பந்தல் எஸ்டேட் தேயிலை தொழிற்சாலையில் பணியாற்றும், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கணேஷ், 36, மானை வேட்டையாடியது தெரிந்தது. இறந்த மானை மீட்டு, வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி கணேைஷ கைது செய்தனர்.