/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எம்.ஜி.ஆர்., நினைவு நாள்: அனுசரித்த அ.தி.முக.,வினர்
/
எம்.ஜி.ஆர்., நினைவு நாள்: அனுசரித்த அ.தி.முக.,வினர்
எம்.ஜி.ஆர்., நினைவு நாள்: அனுசரித்த அ.தி.முக.,வினர்
எம்.ஜி.ஆர்., நினைவு நாள்: அனுசரித்த அ.தி.முக.,வினர்
ADDED : டிச 25, 2025 05:20 AM

சூலூர் தொகுதி அ.தி.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இருகூர் பேரூராட்சி காமாட்சி புரத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., திருவுருவ சிலைக்கு, சூலூர் எம்.எல்.ஏ., கந்தசாமி தலைமையில், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
எம்.எல்.ஏ., கந்தசாமி பேசுகையில், தமிழக மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றவர் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., அவரது பெயரை பயன்படுத்தாத அரசியல் கட்சியே கிடையாது. அனைத்து தரப்பு மக்களின் நன்மதிப்பை பெற்று தமிழகத்தை அதிக ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவரது நினைவு நாளை ஒட்டி, மீண்டும் தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்ற அனைவரும் உறுதி ஏற்க வேண்டும், என்றார்.
எம்.ஜி.ஆர்., மன்ற நிர்வாகி அசோகன், ஒன்றிய செயலாளர் குமரவேல், கந்தவேல், இருகூர் பேரூராட்சி செயலாளர் ஆனந்த குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
* அன்னூர் வட்டாரத்தில், அ.தி.மு.க., சார்பில், எம்.ஜி.ஆர்., நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
அன்னூர் வடக்கு ஒன்றி யத்தில், ஒட்டர்பாளையம், பொகலூர், பசூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் எம்.ஜி.ஆர்., படங்கள் வைக்கப்பட்டு, அ.தி.மு.க.,வினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அன்னூர் தெற்கு ஒன்றியத்தில், கரியாம்பாளையம், கணேசபுரம், பொன்னே கவுண்டன்புதூர், குன்னத்தூர் பகுதியில் அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., படத்திற்கு, மாவட்ட, ஒன்றிய, நிர்வாகிகள் மலர் தூவினர்.
அன்னூர் நகரில், நகரச் செயலாளர் சவுக்கத் அலி தலைமையில், அ.தி.மு.க., வினர் எம்.ஜி.ஆர். படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
* பெரியநாயக்கன்பாளையம் அருகே கூடலூர் கவுண்டம்பாளையம் பஸ் ஸ்டாண்டில் உள்ள எம்.ஜி.ஆர்., உருவ சிலைக்கு கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., அருண்குமார் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய அ.தி.மு.க.,வினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
* நரசிம்மநாயக்கன்பாளையம், சின்னதடாகம், துடியலூர், ஜோதிபுரம், பெரியநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் உருவப்படம் வைக்கப்பட்டு இருந்தது. அ.தி.மு.க.,வினர் அஞ்சலி செலுத்தினர்.
* பெரியநாயக்கன்பாளையம் அருகே ஜோதிபுரத்தில் எம்.ஜி.ஆர்., நினைவு நாளையொட்டி சிறப்பு அன்னதானம் நடந்தது.
* மேட்டுப்பாளையத்தில் அ.தி.மு.க., சார்பில் எம்.ஜி.ஆரின் நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது.
ஊட்டி சாலையில் உள்ள காந்தி சிலையிலிருந்து, அ.தி.மு.க.,வினர் மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., செல்வராஜ் தலைமையில் மவுன ஊர்வலம் வந்தனர். பஸ் ஸ்டாண்ட் அருகே அமைந்துள்ள, எம்.ஜி.ஆரின் உருவ படத்துக்கு, கோவை வடக்கு மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் அருண்குமார் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து உறுதிமொழி எடுத்தனர்.
மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் நாசர், மேட்டுப்பாளையம் நகர செயலாளர் வான்மதி சேட் உள்பட நிர்வாகிகள், கட்சியினர், எம்.ஜி.ஆர் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
-நமது நிருபர் குழு-

