/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கே.ஐ.டி., கல்லுாரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
/
கே.ஐ.டி., கல்லுாரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ADDED : செப் 22, 2024 05:48 AM

கோவை, : கே.ஐ.டி., தொழில்நுட்ப கல்லுாரி மற்றும் ஐ.ஐ.டி., சென்னை வளாகத்தில் உள்ள உற்பத்தி தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்துடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வு, கல்லுாரி அரங்கில் நடந்தது.
ஐ.ஐ.டி., சென்னை மைய செயலாளர் ரமேஷ்பாபு கூறுகையில், ''வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப உலகில், கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள் மாற்றிஅமைக்கப்படவேண்டும். இன்றைய வேலைவாய்ப்புக்கு தயார்படுத்திக்கொள்ள, பாரம்பரிய கற்பித்தல் முறைகள் மட்டும் போதாது,'' என்றார்.
இந்நிகழ்வில், கல்லுாரி நிறுவனத்தலைவர் பழனிசாமி, துணைத்தலைவர் இந்துமுருகேசன், தலைமை நிர்வாக அதிகாரி மோகன்தாஸ் காந்தி, முதல்வர் ரமேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

