/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேளாண் பல்கலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
/
வேளாண் பல்கலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ADDED : டிச 31, 2024 04:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை, : தமிழ்நாடு வேளாண் பல்கலை தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப மையம் மற்றும் ஓசூர் சங்கர் பயோடெக் நிறுவனத்துடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வு பல்கலை அரங்கில் நடந்தது.
இதன் வாயிலாக, வாழையில் தரமான திசு வளர்ப்பு கன்றுகளை உற்பத்தி செய்து வழங்கப்படவுள்ளது. திசு வளர்ப்பு சார்ந்த ஆராய்ச்சிகளை மையமாக கொண்டு, இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்நிகழ்வில், துணைவேந்தர் கீதாலட்சுமி, பதிவாளர் தமிழ்வேந்தன், உயிரி தொழில்நுட்ப மைய இயக்குனர் செந்தில், சங்கர் பயோடெக் நிறுவன உரிமையாளர் சங்கர், இயக்குனர் இளையபாலன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

