/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வருவாய் ஆய்வாளருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது
/
வருவாய் ஆய்வாளருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது
ADDED : டிச 18, 2025 05:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னூர்: அன்னூர் தெற்கு வருவாய் ஆய்வாளரை பணி செய்ய விடாமல் தடுத்த, அரசு ஊழியர் கைது செய்யப்பட்டார்.
அன்னூர், அருகே சின்ன வடவள்ளியை சேர்ந்தவர் செந்தில் குமார், 41. அன்னூர் தாலுகாவில், தெற்கு வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு ஏற்கனவே அறிமுகமான, அரசு ஊழியர் தினேஷ் என்பவர், செந்தில்குமாருக்கு கடந்த சில மாதங்களாக, மொபைல் வாயிலாக ஆபாச செய்தி அனுப்புவது, கொலை மிரட்டல் விடுப்பது என, தொந்தரவு செய்து வந்துள்ளார்.
செந்தில்குமார் கொடுத்த புகாரின் பேரில், அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தினேஷை கைது செய்து, அன்னூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

