/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போத்தனுாரில் சிறுத்தை: பொதுமக்கள் பீதி
/
போத்தனுாரில் சிறுத்தை: பொதுமக்கள் பீதி
ADDED : பிப் 07, 2025 10:21 PM
போத்தனுார்; கோவை, போத்தனூரிலிருந்து செட்டிபாளையம் செல்லும் வழியில், மலுமிச்சம்பட்டி பஞ்., க்குட்பட்ட அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் விவேக், 31; தனியார் நிறுவன ஊழியர்.
நேற்று முன்தினம் இவர், வேலைக்கு சென்றுவிட்டு இரவு அண்ணாபுரம் வழியே, வீட்டிற்கு பைக்கில் வந்துகொண்டிருந்தார். அப்போது சிறுத்தை ஒன்று, நாயை கவ்வியவாறு சாலையை கடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இப்பகுதியில் பள்ளி மற்றும் தொழிற்சாலை உள்ளது. சிறுத்தையிடம் இருந்து மக்களை பாதுகாக்க, வனத்துறையினர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
கடந்த மாதம், 25ல் செட்டிபாளையம் அருகே ரேடியோ ஸ்டேஷன் வளாகத்தில் சிறுத்தை புகுந்தது குறிப்பிடத்தக்கது.

