/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கேரள மாவோயிஸ்ட் ஜாமினில் விடுவிப்பு
/
கேரள மாவோயிஸ்ட் ஜாமினில் விடுவிப்பு
ADDED : நவ 29, 2024 11:47 PM
கோவை: கேரள மாவோயிஸ்ட் அனுாப், கோவை மத்திய சிறையிலிருந்து நேற்று ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
கோவை அருகே கருமத்தம்பட்டியில், சதி திட்டத்தில் ஈடுபட்டதாக மாவோயிஸ்ட்கள், கேரளாவை சேர்ந்த ரூபேஷ்54, மனைவி ஷைனி,52, அனுாப்,37, மற்றும் கண்ணன்,56, வீரமணி,69,ஆகியோர், மே., 2015ல், கோவை 'கியூ' பிரிவு போலீசாரால் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இவர்களில், ைஷனி, கண்ணன், வீரமணி ஆகியோர் ஏற்கனவே ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
ரூபேஷ், அனுாப் ஆகியோர் ஜாமினில் விடுவிக்கப்பட்டாலும், தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டனர். கேரள மாநிலம், எர்ணாகுளம் வழக்கு ஒன்றில், அனுாப்பிற்கு ஏழாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த தண்டனை காலம் முடிந்ததை தொடர்ந்து, கருமத்தபட்டியில் சதி திட்டம் தீட்டிய வழக்கில், ஏற்கனவே ஜாமின் பெற்றதால், அதற்கான உத்தரவாத ஆவணங்களை இருநபர் ஜாமின்தாரருடன் சமர்பித்தார். இதனால் கோவை மத்திய சிறையிலிருந்து நேற்று விடுவிக்கப்பட்டார்.

