/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மூட்டு பிரச்னை; வாழ்நாள் பிரச்னை அல்ல!
/
மூட்டு பிரச்னை; வாழ்நாள் பிரச்னை அல்ல!
ADDED : ஜன 23, 2025 11:57 PM

''மூட்டுக்களில் ஏற்படும் பிரச்னையை வாழ்நாள் பிரச்னையாக கருதி அச்சப்படக் கூடாது. ஜவ்வுகள் பிய்ந்திருந்தால் கூட மூட்டுகளில் பிரச்னை ஏற்படும். உரிய பரிசோதனை மற்றும் சிகிச்சை மேற்கொண்டால், எளிதில் குணமடையலாம்,'' என்கிறார், கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை எலும்பு முறிவு, மூட்டு மாற்று மற்றும் நுண்துளை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பாஸ்கரன்.
அவர் கூறியதாவது:
மூட்டு பகுதியில் உள்ள, 'மெனிஷ்கஸ்' என்ற ஜவ்வு தேய்ந்து பிய்ந்துவிட்டால், மூட்டுகளில் கடும் வலி ஏற்படும். நடப்பதற்கு கஷ்டமாக இருக்கும். மடக்கி, நீட்டுவதில் சிரமம், கால்களை மடக்கி சிறிது நேரம் அமர்ந்திருந்தால் கால் பிடித்தது போல் இருப்பது போன்ற பிரச்னைகள் ஏற்படும்.
இதுபோன்ற பாதிப்புகள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி எக்ஸ்ரே அல்லது எம்.ஆர்.ஐ., பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். பரிசோதனையில் முற்றிலுமாக எலும்பு தேய்மானம் இருந்தால், மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும்.
தேய்மானம் இன்றி, ஜவ்வு பிய்ந்து இருந்தால், பாதிப்பின் அளவை பொறுத்து சிகிச்சை அளிக்கப்படும். ஜவ்வு பிய்ந்து போனால், மீண்டும் பழைய நிலைக்கு வராமல் தசை சுருங்கி விடும். நுண்துளை அறுவை சிகிச்சை வாயிலாக, சுருங்கிய தசையை செயற்கையாக அதன் இடத்தில் வைத்து கட்டுவதுதான், இந்த ஜவ்வு பாதுகாப்பு சிகிச்சை முறை.
தோள்பட்டையில் ஏற்படும் இப்பிரச்னையை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், சிகிச்சை வாயிலாக, மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வந்து விடமுடியும். கவனிக்காமல் அலட்சியத்துடன் இருந்தால், அவை கொழுப்பாக மாறி மூட்டு தேய்மானம் அதிகரித்து, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் சூழ்நிலைக்கு தள்ளிவிடும்.
கே.எம்.சி.எச்., மருத்துவமனையில் ஜவ்வு பாதுகாப்பு சிகிச்சை உள்ளிட்ட மூட்டு சம்பந்தமான அனைத்து பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், உயர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதற்கான அனைத்து வசதிகளும் இங்குள்ளன.
மேலும் விவரங்களுக்கு, 733 9333 485 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

