/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மண் வெட்டி எடுத்த வழக்கில் மாயமானவர் வீட்டில் நகை திருட்டு
/
மண் வெட்டி எடுத்த வழக்கில் மாயமானவர் வீட்டில் நகை திருட்டு
மண் வெட்டி எடுத்த வழக்கில் மாயமானவர் வீட்டில் நகை திருட்டு
மண் வெட்டி எடுத்த வழக்கில் மாயமானவர் வீட்டில் நகை திருட்டு
ADDED : அக் 01, 2024 11:30 PM

தொண்டாமுத்தூர் : சட்டவிரோதமாக மண் வெட்டி எடுத்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, தலைமறைவானவரின் வீட்டில், 19 பவுன் நகை திருட்டு போனது.
ஆலாந்துறை அடுத்த சீனிவாசபுரம், பட்டாளம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஹரி,30. இவர், சொந்தமாக டிப்பர் லாரி வைத்து டிரான்ஸ்போர்ட் தொழில் நடத்தி வருகிறார். வெள்ளிமலைபட்டிணத்தில், பட்டா நிலத்தில் அனுமதியின்றி மண் வெட்டி எடுத்ததாக வெள்ளிமலைபட்டிணம் வி.ஏ.ஓ., கங்கேஸ்வரன் அளித்த புகாரின் பேரில், ஆலாந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இவ்வழக்கில், அனுமதியின்றி மண் எடுத்ததாக, ஹரியையும் குற்றவாளியாக சேர்த்துள்ளனர். இதனால், கடந்த ஒரு வாரமாக ஹரி தலைமறைவாக உள்ளார்.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு, ஹரியின் தாய் சீதாலட்சுமி, தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார்.
நேற்று அதிகாலை, குல்லா அணிந்து வந்த மர்ம நபர், வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 19 பவுன் நகையை திருடி சென்றுள்ளார்.
இது குறித்து, ஹரியின் தாய் சீதாலட்சுமி, ஆலாந்துறை போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார், வழக்கு பதிவு செய்து, சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகியுள்ள நபரை தேடி வருகின்றனர்.

