/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிரதான கால்வாய் புதுப்பிக்கும் பணி விரைந்து முடித்து நீர் திறக்க அறிவுரை

ADDED : பிப் 14, 2024 10:53 PM

உடுமலை, - அமராவதி பிரதானக்கால்வாய் புதுப்பிக்கும் பணிகளை, திருப்பூர் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.
அமராவதி அணை, பிரதான கால்வாய் வாயிலாக, புதிய ஆயக்கட்டு பாசனத்திற்குட்பட்ட, 25 ஆயிரத்து, 250 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பாசன பகுதிகளில், நிலையிலுள்ள பயிர்களை காப்பாற்றும் வகையில், கடந்த, 1ம் தேதி, பிரதான கால்வாயில் நீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில், பிரதான கால்வாய், வலது கரையில் உள்ள கீழ்மட்ட குகைவழிப்பாதையில் திடீர் உடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, நீர் திறப்பு நிறுத்தப்பட்டு, பராமரிப்பு பணி நடந்து வருகிறது.
அமராவதி பிரதானக்கால்வாய் கி.மீ., 7 - 5 முதல், 16 - 5 வரையிலுள்ள, ஏழு சுரங்க வழி பாதைகள், 5 தலைப்பு மதகுகள், 18 நேரடி மதகுகள் ஆகிய கால்வாய் குறுக்கே அமைந்துள்ள கட்டுமானங்கள் புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அமராவதி பிரதானக் கால்வாய், உடைப்பு ஏற்பட்ட பகுதியில், கான்கிரீட் அமைக்கும் பணியை, திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார். பணியை விரைவாக முடித்து, பாசனத்திற்கு தண்ணீர் திறக்க அறிவுறுத்தினார்.