/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எல்.எம்.டபிள்யூ., மையத்தில் இஸ்ரோ தலைவர்
/
எல்.எம்.டபிள்யூ., மையத்தில் இஸ்ரோ தலைவர்
ADDED : செப் 18, 2025 11:44 PM

கோவை; எல்.எம்.டபிள்யூ., நிறுவனத்தின் அதிநவீன தொழில்நுட்ப மையம், இஸ்ரோவின் விண்வெளி சார்ந்த திட்டங்களில் சிறந்த பங்களிப்பை நல்கி வருகிறது. நேற்று கோவை வந்திருந்த இஸ்ரோ தலைவர் நாராயணன், எல்.எம்.டபிள்யூ., தொழில்நுட்ப மையத்தை பார்வையிட்டார்.
மையத்தின் உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு, விண்வெளி திட்டங்களில் பங்களிப்பு உள்ளிட்டவை சார்ந்து இந்தியாவின் விண்வெளி தொழில்நுட்பச் சூழலை வலிமைப்படுத்தும் விதமாக கலந்துரையாடல் நடந்தது.
தொழில்நுட்ப மையத்தின் உற்பத்தி கூடங்களை பார்வையிட்டார். அப்போது, இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட்டுக்கான ஓகிவ் பேலோடு தயாரித்து வழங்கியது மற்றும் எஸ்.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்டுகளுக்கான உதிரி பாகங்களில், எல்.எம்.டபிள்யூ. பங்களிப்பு குறித்து நினைவு கூரப்பட்டது.
'இந்தியாவின் விண்வெளி பயணத்துக்கு, அதிஉயர்ந்த பொறியியல் நுட்பம், சிறந்த தரம், மகத்துவமிக்க உற்பத்தி திறன் ஆகியவற்றின் மூலம் வலிமையூட்டுவதில் தொடர்ந்து அர்ப்பணிப்போடு செயல்படுவோம்' என, எல்.எம்.டபிள்யூ. தரப்பில் உறுதி தெரிவித்தனர்.
நிகழ்வின்போது, எல்.எம்.டபிள்யூ. ஏ.டி.சி. தலைவர் கிருஷ்ணகுமார், இயக்குனர் (செயல்பாடுகள்) சங்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.