/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குளோரினேஷன் சரியாக உள்ளதா; சுகாதாரத்துறையினர் ஆய்வு
/
குளோரினேஷன் சரியாக உள்ளதா; சுகாதாரத்துறையினர் ஆய்வு
குளோரினேஷன் சரியாக உள்ளதா; சுகாதாரத்துறையினர் ஆய்வு
குளோரினேஷன் சரியாக உள்ளதா; சுகாதாரத்துறையினர் ஆய்வு
ADDED : அக் 16, 2024 09:12 PM
சூலுார் : ஊராட்சி குடிநீர் தொட்டிகளில் தண்ணீரின் தூய்மை தன்மை குறித்து சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்தனர்.
சுல்தான்பேட்டை வட்டார சுகாதார துறை சார்பில், ஊராட்சிகளில் உள்ள குடிநீர் தொட்டிகளில் உள்ள தண்ணீரின் தன்மை குறித்து ஆய்வு செய்யும் பணி நடக்கிறது.
சுல்தான்பேட்டை வட்டாரத்தில், 20 ஊராட்சிகளில், 75 மேல்நிலை குடிநீர் தொட்டிகள், 40 தரைமட்ட தொட்டிகள் உள்ளன. இவற்றில் சேமிக்கப்படும் தண்ணீர் தூய்மையாக உள்ளதா, குளோரினேஷன் முறையாக செய்யப்படுகிறதா என, சுகாதாரத்துறை மேற்பார்வையாளர் சாலமன், ரவிச்சந்திரன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
பாப்பம்பட்டி, பெரிய குயிலி ஊராட்சிகளில் உள்ள குடிநீர் தொட்டிகளில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
குடிநீர் தொட்டிகளை, 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும். வயிற்று போக்கு, மஞ்சள் காமாலை, காலரா பாதிப்பு ஏற்படாமல் இருக்க முறையாக குளோரினேஷன் செய்ய வேண்டும் என்று குடிநீர் தொட்டி ஆப்பரேட்டர்களிடம் சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தினர்

