/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பா.ஜ., விவசாயிகள் மாநாட்டுக்கு அழைப்பிதழ் விநியோகம் ஜரூர்
/
பா.ஜ., விவசாயிகள் மாநாட்டுக்கு அழைப்பிதழ் விநியோகம் ஜரூர்
பா.ஜ., விவசாயிகள் மாநாட்டுக்கு அழைப்பிதழ் விநியோகம் ஜரூர்
பா.ஜ., விவசாயிகள் மாநாட்டுக்கு அழைப்பிதழ் விநியோகம் ஜரூர்
ADDED : டிச 31, 2025 05:13 AM

அன்னூர்: பா.ஜ., விவசாயிகள் விழிப்புணர்வு மாநாட்டு அழைப்பிதழ் தோட்டம், தோட்டமாக விநியோகிக்கப்பட்டது.
பா.ஜ., விவசாய அணி சார்பில், விவசாயிகள் விழிப்புணர்வு மாநாடு வருகிற 5ம் தேதி ஈரோடு மாவட்டம், வில்லரசம்பட்டியில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில், மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், இணை அமைச்சர் முருகன், பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்பட பலர் பங்கேற்கின்றனர்.
மாநாட்டில் விவசாய கண்காட்சி நடைபெறுகிறது. இயற்கை விவசாய முன்னோடிகள் பேசுகின்றனர். பெண் விவசாயிகளுக்கு சுய தொழில் பயிற்றுவிக்கப்படுகிறது.
இந்த மாநாட்டில் அதிக அளவில் பங்கேற்க, கோவை வடக்கு மாவட்டத்தில் தோட்டம் தோட்டமாக அழைப்பிதழ் விநியோகம் நடந்தது.
நேற்று பா.ஜ., விவசாய அணி வடக்கு மாவட்ட தலைவர் வெள்ளிங்கிரி தலைமையில், நிர்வாகிகள் அன்னூர் வட்டாரத்தில் அழைப்பிதழ் விநியோகித்தனர். கோவை வடக்கு மாவட்டத்தில் இருந்து 2,000 பேர் மாநாட்டில் பங்கேற்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
அழைப்பிதழ் விநியோகத்தில், விவசாய அணி மாவட்ட பொதுச் செயலாளர் ரவி, மாநில செயற்குழு உறுப்பினர் விஜயகுமார், மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

