/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருதமலையில் கும்பாபிேஷக விழாகலெக்டருக்கு அழைப்பு
/
மருதமலையில் கும்பாபிேஷக விழாகலெக்டருக்கு அழைப்பு
ADDED : மார் 28, 2025 03:09 AM
கோவை: மருதமலை சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவை சிறப்பாக நடத்திக்கொடுக்க வேண்டும் என்று மருதமலை கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஜெய்குமார் தலைமையிலான குழுவினர் கலெக்டருக்கு அழைப்பு விடுத்தனர்.
மருதமலை சுப்ர மணிய சுவாமி கோவில் திருக்குட நன்னீராட்டு விழா வரும் ஏப்.,4 அன்று நடக்கிறது. விழாவை தலைமை தாங்கி நடத்திக்கொடுக்கவும்,சிறப்பிக்கவும் வேண்டி கலெக்டர் பவன்குமாருக்கு, மருதமலை அறங்காவலர் குழு தலைவர் ஜெய்குமார் தலைமையிலான அறங்காவலர்கள் நேற்று நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.
முன்னதாக கலெக்டர் பவன்குமாருக்கு மாலை அணிவித்து, மங்களப்பொருட்கள் சமர்ப்பித்து, பத்திரிகை வைத்து அழைப்பு விடுத்தனர். அழைப்பை ஏற்றுக்கொண்டு விழாவில் பங்கேற்பதாக உறுதியளித்தார்.
இதையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சங்கத் பல்வந்த் வாகே ஆகியோருக்கும் கோவில் அறங்காவலர்கள் பத்திரிகை வைத்து அழைப்பு விடுத்தனர்.

