/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாலத்தில் வளரும் ஆலமரம் அகற்ற வலியுறுத்தல்
/
பாலத்தில் வளரும் ஆலமரம் அகற்ற வலியுறுத்தல்
ADDED : செப் 30, 2024 06:38 AM

பொள்ளாச்சி ; பொள்ளாச்சி, கோட்டூர் ரோடு மேம்பாலத்தின் கீழ், ஆலமர செடி வளர்ந்துள்ளதை வெட்டி அகற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சி, கோட்டூர் ரோடு மேம்பாலம் வழியாக ஆழியாறு, வால்பாறை மற்றும் சுற்றுப்பகுதிகளுக்கு தினமும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த பாலத்தின் கீழ் குடியிருப்புகள், வணிக வளாகங்கள் அதிகளவு உள்ளன. இந்நிலையில், பாலத்தின் கீழ் பகுதியில் ஆலமர செடி ஒன்று வளர்ந்து வருவதை அகற்ற மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் கூறுகையில், 'நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் உள்ள மேம்பாலத்தின் கீழ் பகுதியில், ஆலமர செடி ஒன்று வளர்ந்து வருகிறது. இது வேர் பிடித்து வளரும் போது, பாலத்தின் உறுதித்தன்மை பாதிக்கும் அபாயம் உள்ளது.
தற்போது, இரண்டு இடங்களில் செடிகள் வளர்ந்துள்ளன. அவற்றை அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி அகற்ற வேண்டும்,' என்றனர்.

