/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சந்திரமாரி பள்ளியில் புதிய கட்டடம் திறப்பு
/
சந்திரமாரி பள்ளியில் புதிய கட்டடம் திறப்பு
ADDED : அக் 14, 2024 11:41 PM

கோவை : காளப்பட்டியில் உள்ள சந்திரமாரி சர்வதேச பள்ளியின், புதிய கட்டடம் நேற்று துவக்கி வைக்கப்பட்டது. பள்ளியின் தலைவர் முரளிகுமார் தலைமை வகித்தார். தாளாளர் சுமதி விளக்கேற்றி நிகழ்வை துவக்கிவைத்தார். அறங்காவலர்கள் சுரேஷ்பாபு, கலைவாணி பங்கேற்றனர்.
புதிய கட்டட வசதிகள் குறித்து, பள்ளியின் தலைவர் முரளிகுமார் பேசுகையில், சர்வதேச தரத்திலான கல்வியை, சர்வதேச கட்டமைப்பில் கோவையில் தர வேண்டும் என்பதற்காகவே இப்பள்ளியை துவக்கியுள்ளோம்.
வணிக நோக்கம் இல்லாமல், மாணவர்களின் எதிர்காலத்தேவையை அறிந்து, புதிய தொழில்நுட்பங்களையும் அளிக்க உள்ளோம். சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் இயங்கும் இப்பள்ளியில், யு.கே.ஜி., முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, கற்பிக்கப்பட்டு வருகிறது.
பிளஸ்2 வகுப்புகளுக்கான ஆய்வக வசதிகள் செய்யப்பட்டுள்ளன. விளையாட்டு, மலையேற்றம், ஒலி, ஒளி ஊடகங்கள், கம்ப்யூட்டர் வசதிகள் என அனைத்து வசதிகளும் பள்ளியில் ஏற்படுத்தப்பட்டுள்ளன, என்றார்.
விழாவில், முதல்வர் விஷால் பண்டாரி, ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

