/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அதிக ஓட்டு வாங்கினால் பைக், ஸ்கூட்டர் பரிசு! அ.தி.மு.க., பூத் முகவர்கள் கூட்டத்தில் அறிவிப்பு
/
அதிக ஓட்டு வாங்கினால் பைக், ஸ்கூட்டர் பரிசு! அ.தி.மு.க., பூத் முகவர்கள் கூட்டத்தில் அறிவிப்பு
அதிக ஓட்டு வாங்கினால் பைக், ஸ்கூட்டர் பரிசு! அ.தி.மு.க., பூத் முகவர்கள் கூட்டத்தில் அறிவிப்பு
அதிக ஓட்டு வாங்கினால் பைக், ஸ்கூட்டர் பரிசு! அ.தி.மு.க., பூத் முகவர்கள் கூட்டத்தில் அறிவிப்பு
ADDED : மார் 13, 2024 11:54 PM

கோவை : கோவை வடக்கு, தெற்கு மற்றும் சிங்காநல்லுார் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட அ.தி.மு.க., பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டம், இதயதெய்வம் மாளிகையில் நேற்றிரவு நடந்தது.
அதில், மாநகர் மாவட்ட செயலாளரான, எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜூனன் பேசியதாவது:
பூத் வாரியாக வாக்காளர் பட்டியல் பிரித்து வழங்கப்பட்டிருக்கிறது. 100 பேருக்கு ஒருவர் வீதம் பிரித்து வீடு வீடாகச் செல்ல வேண்டும்.
அ.தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்திய தாலிக்குத் தங்கம், இலவச அரிசி, பள்ளி குழந்தைகளுக்கு 16 வகையான பொருட்கள் வழங்கியது உள்ளிட்ட திட்டங்களை பட்டியலிட்டு, மக்களிடம் சேர்ப்பிக்க வேண்டும்.
தி.மு.க.. ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகை அனைவருக்கும் வழங்காமல் இருப்பது; முதியோர் உதவித்தொகையை நிறுத்தி விட்டு, உரிமைத் தொகையாக மாற்றி வழங்குவதை எடுத்துச் சொல்ல வேண்டும். தாலிக்குத் தங்கம் திட்டத்தை, தி.மு.க., அரசு நிறுத்தியதை எடுத்துச் சொல்ல வேண்டும்.
அதிக ஓட்டு பெற்றுக் கொடுக்கும் பூத் முகவருக்கு, ஆணாக இருந்தால் பைக், பெண்ணாக இருந்தால் ஸ்கூட்டர் முதல் பரிசாக வழங்கப்படும். இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசாக அரை பவுன் தங்கம் வழங்கப்படும்.
கடந்த தேர்தலில் ஒவ்வொரு பூத்திலும் பெற்ற ஓட்டுகளை விட, 100 ஓட்டுகளாவது அதிகரிக்க வேண்டும். கள்ள ஓட்டு போடுவதில் தி.மு.க.,வினர் கில்லாடிகள். இறந்தவர்கள் ஓட்டுகளை கூட பதிவு செய்ய வருவர்.
ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இறந்தவர்கள், வெளியூருக்கு இடம் பெயர்ந்தவர்கள் விபரத்தை சேகரித்து, தனி பட்டியலாக வைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
கூட்டத்தில் பங்கேற்ற, பூத் முகவர்கள் அனைவருக்கும் சில்வர் பிளாஸ்க், மட்டன் பிரியாணி வழங்கப்பட்டது.

