/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இன்னும் எத்தனை ஆண்டுகள்தான் அலைவது? வீட்டு வசதி வாரிய ஒதுக்கீட்டாளர்கள் கேள்வி
/
இன்னும் எத்தனை ஆண்டுகள்தான் அலைவது? வீட்டு வசதி வாரிய ஒதுக்கீட்டாளர்கள் கேள்வி
இன்னும் எத்தனை ஆண்டுகள்தான் அலைவது? வீட்டு வசதி வாரிய ஒதுக்கீட்டாளர்கள் கேள்வி
இன்னும் எத்தனை ஆண்டுகள்தான் அலைவது? வீட்டு வசதி வாரிய ஒதுக்கீட்டாளர்கள் கேள்வி
ADDED : மார் 11, 2024 01:49 AM
கோவை;வீட்டு உரிமை பத்திரம் தொடர்பான, 30 ஆண்டு கால போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு ஒதுக்கீட்டாளர்கள் நலச்சங்கத்தினர் முறையிட்டுள்ளனர்.
தமிழக வீட்டு வசதி வாரிய ஒருங்கிணைந்த ஒதுக்கீட்டாளர்கள் நலச்சங்க மாநில பொது செயலாளர் ஜெயச்சந்திரன், வீட்டு வசதி வாரிய தலைமை பொறியாளர் சரவணனிடம் அளித்த மனு:
கடந்த, 30 ஆண்டு காலமாக வீட்டின் உரிமை பத்திரத்துக்காக போராடிவருகிறோம். நீதி மன்றத்தின் எந்த தீர்ப்புக்கும் கட்டுப்படாமல் பல ஆயிரம் ஒதுக்கீட்டாளர்கள் அலைந்துவருகின்றனர். பரஸ்பர ஒப்புதலுடன் அமைக்கப்பட்ட இசைவு தீர்ப்பாயத்தின் தீர்ப்பை இன்று வரை அமல்படுத்தாமல் அதிகாரிகள் உள்ளனர்.
மக்களுடன் முதல்வர், மாவட்ட நிர்வாகம் என பல இடங்களில், பல முறை மனுக்கள் அளித்துள்ளோம். உண்மைக்கு மாறான, திசை திரும்ப செய்கிற வகையிலும், தீர்ப்புகளின் உண்மை தன்மையை நீர்த்து போக செய்கிற வகையிலும் பதில் கடிதம் அமைந்துள்ளது. இன்னும் எத்தனை ஆண்டுகள்தான் நீதிமன்றங்களில் அலைவது.
ஏறக்குறைய அனைத்து ஒதுக்கீட்டாளர்களும் மூன்றாம் தலைமுறையை கண்டுவிட்டோம். பலர் நியாயமான விலையில் வீட்டின் பத்திரம் என்பது கனவுதான் என்ற நிலையில் காலமும் ஆகிவிட்டனர். எஞ்சியிருப்பவர்கள் அனைவருமே, 65 முதல் 75 வயததை கடந்தவர்கள். எனவே, நியாயமான விலையில் வீட்டு பத்திரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அதிகப்படியாக வசூலித்த, நாங்கள் செலுத்திய தொகையை திரும்ப வழங்க வேண்டும்.
இவ்வாறு, அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.

