/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென்னையில் வெள்ளை ஈக்கள் கட்டுப்படுத்த இதோ ஆலோசனை
/
தென்னையில் வெள்ளை ஈக்கள் கட்டுப்படுத்த இதோ ஆலோசனை
தென்னையில் வெள்ளை ஈக்கள் கட்டுப்படுத்த இதோ ஆலோசனை
தென்னையில் வெள்ளை ஈக்கள் கட்டுப்படுத்த இதோ ஆலோசனை
ADDED : டிச 22, 2025 05:15 AM
பெ.நா.பாளையம்: தென்னையில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த பின்பற்றப்பட வேண்டிய ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகளை, பெரியநாயக்கன்பாளையம் வேளாண் துறை விவசாயிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.
* மஞ்சள் நிற பாலித்தீன் தாள்களால் உருவாக்கப்பட்ட இரண்டு புறமும், விளக்கெண்ணெய் தடவப்பட்ட மஞ்சள் நிற ஒட்டும் பொறிகள் ஏக்கருக்கு, 8 வீதம், 6 அடி உயரத்தில் தொங்க விட்டும் அல்லது தென்னை மரங்களின் தண்டு பகுதியில் சுற்றியும், ஈக்களின் நடமாட்டத்தை கண்காணித்தும், கவர்ந்தும் அழிக்கலாம்.
* வெள்ளை ஈக்கள், தாக்கப்பட்ட மரங்களின் கீழ்மட்ட ஓலைகளின் உட்பகுதியில் படுமாறு விசைத்தெளிப்பான் கொண்டு, வேகமாக தண்ணீரை பீய்சசி அடித்து தெளிப்பதன், வாயிலாகவும் ஈக்களின் எண்ணிக்கை பெருகுவதை குறைக்கலாம்.
* வெள்ளை ஈக்களின் இளம் குஞ்சுகளை கட்டுப்படுத்தும் திறன் கொண்ட, ஒட்டுண்ணி குளவி என்கார்சியா கூட்டுப் புழுவினை உள்ளடக்கிய, தென்னை ஓலைகளை ஏக்கருக்கு, 10 இலை துண்டுகள் வீதம் தாக்கப்பட்ட ஓலைகளின் மீது, 10 மரம் இடைவெளியில் வைத்தும் கட்டுப்படுத்தலாம்.
* கிரைசோபிட் என்ற பச்சை கண்ணாடி இயற்கை பூச்சி இரை விழுங்கி முட்டைகளை ஏக்கருக்கு, 400 வீதம், தாக்கப்பட்ட மரங்களில் வைத்தும் கட்டுப்படுத்தலாம்.
* சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதலால், பின் விளைவாக ஏற்படும் கரும்பூசாணத்தை கட்டுப்படுத்த மைதாமாவு பசை கரைசலை, ஒரு லிட்டர் தண்ணீரில், 2.5 கிராம் மற்றும் ஒட்டுத்திரவம் ஒரு மிலி சேர்த்து, கீழ் நிலை அடுக்குகளில் படிந்து இருக்கும் கரும்பூசாணங்களின் மேல் நன்றாக படுமாறு தெளிக்க வேண்டும்.
மைதா மாவு பசை தெளித்த, மூன்று முதல் ஐந்து நாட்களில் இலைகளில் இருந்து, கரும்பூசாணங்கள் வெயிலில் காய்ந்து உதிர்ந்து விடும் என, தென்னை விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுரை வழங்கி உள்ளது.

