/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
2 பேர் உயிரிழந்ததை மறந்து விட்டார்களோ; இரும்பு தடுப்பை சீரமைப்பது எப்போது
/
2 பேர் உயிரிழந்ததை மறந்து விட்டார்களோ; இரும்பு தடுப்பை சீரமைப்பது எப்போது
2 பேர் உயிரிழந்ததை மறந்து விட்டார்களோ; இரும்பு தடுப்பை சீரமைப்பது எப்போது
2 பேர் உயிரிழந்ததை மறந்து விட்டார்களோ; இரும்பு தடுப்பை சீரமைப்பது எப்போது
ADDED : ஏப் 18, 2025 06:38 AM

கோவை; கோவை - திருச்சி ரோடு மேம்பாலத்தில், இதற்கு முன் விபத்து ஏற்பட்டு, மேலிருந்து கீழே விழுந்து இருவர் உயிரிழந்த இடத்தில், இரும்பு தடுப்பு சேதமாகியிருக்கிறது. அவ்விடத்தை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் இன்னும் சரி செய்யாமல் இருக்கின்றனர்.
கோவை - திருச்சி ரோட்டில், 'ரெயின்போ' ஸ்டாப் முதல் அல்வேர்னியா பள்ளி வரை, 3.5 கி.மீ., துாரத்துக்கு தேசிய நெடுஞ்சாலைத்துறையினரால் மேம்பாலம் கட்டப்பட்டது.
இந்த பாலத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள் அதிவேகமாக பயணித்ததால், ஆங்காங்கே விபத்தை சந்தித்தனர். அடுத்தடுத்து இரு வேறு சம்பவங்களில், பைக்குகளில் வந்த இருவர், மேம்பாலத்தில் இருந்து கீழே சாலையில் விழுந்து உயிரிழந்தனர். இதன்பின், போக்குவரத்து போலீசார், தேசிய நெடுஞ்சாலைத்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடங்களில் கள ஆய்வு செய்து, சாலை பாதுகாப்புக்கான நடவடிக்கை எடுத்தனர்.
தேவையான இடங்களில் ரப்பர் ஷீட்டுகளால் மித வேகத்தடை அமைக்கப்பட்டது; எச்சரிக்கை அறிவிப்புகள் வைக்கப்பட்டன. 40 கி.மீ., வேகத்தில் மட்டுமே பயணிக்க வேண்டுமென ஆங்காங்கே பெயிண்டால் எழுதப்பட்டன. விபத்து நடந்த வளைவு பகுதியில் மேம்பாலத்தில் இருந்து கீழே விழாத அளவுக்கு இருபுறமும் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டன.
இச்சூழலில், 'ரெயின்போ' பகுதியில் இருந்து செல்லும் வழித்தடத்தில் சமீபத்தில் விபத்து ஏற்பட்டு, இரும்பு தடுப்புகள் சேதமாகியுள்ளன. அவை இன்னும் சீரமைக்கப்படாமல் இருக்கின்றன. மீண்டும் விபத்து ஏற்பட்டு, உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன், அப்பகுதியில் இரும்பு தடுப்பு அமைக்க வேண்டும்.

