/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நாச்சியார் தி வேர்ல்ட் பள்ளியில் குருகுல வாழ்த்து விழா
/
நாச்சியார் தி வேர்ல்ட் பள்ளியில் குருகுல வாழ்த்து விழா
நாச்சியார் தி வேர்ல்ட் பள்ளியில் குருகுல வாழ்த்து விழா
நாச்சியார் தி வேர்ல்ட் பள்ளியில் குருகுல வாழ்த்து விழா
ADDED : டிச 31, 2025 07:52 AM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, ஜமீன் ஊத்துக்குளி நாச்சியார் தி வேர்ல்ட் பள்ளியில், 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களை வாழ்த்தும் வகையில், குருகுல வாழ்த்து விழா மற்றும், 25வது ஆண்டு பொன்விழா நடந்தது.
சிறப்பு விருந்தினர்களாக சிவசக்தி வடிவேல், நளினி, கவுரவ விருந்தினர்களாக, முருகேஷ் புத்துார், சாந்திபுத்துார் பங்கேற்று பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஞான விளக்கை வழங்கி அர்ச்சதை துாவி வாழ்த்தினர்.
பள்ளி நிறுவனர் சின்னசாமி, மனோரமா, பள்ளி ஆலோசகர் குருமூர்த்தி, பள்ளி தாளாளர் மணி, பள்ளி முதல்வர் விஜயலட்சுமி நாச்சியார் முன்னிலை வகித்தனர். ஆசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.
கடந்த கல்வியாண்டில் பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற, 10ம் வகுப்பு, பிளஸ்2 மாணவர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. பள்ளியின், 25ம் ஆண்டு வெள்ளி விழாவையொட்டி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

