தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கில்லி

கில்லி

கில்லி


ADDED : பிப் 08, 2024 11:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2024 11:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை, -சங்கரா பாலிடெக்னிக் கல்லுாரி சார்பில் நடந்த மாநில அளவிலான பாலிடெக்னிக் கபடி போட்டியில், திருநெல்வேலி பி.எஸ்.என்., கல்லுாரி முதலிடம் பிடித்தது.

இன்டர் பாலிடெக்னிக் அத்லெடிக் அசோசியேஷன் (ஐ.பி.ஏ.ஏ.,) சார்பில் பாலிடெக்னிக் மாணவர்களுக்கான மாநில அளவிலான கபடி போட்டி சங்கரா பாலிடெக்னிக் கல்லுாரி சார்பில் நடந்தது.

சங்கரா கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் கல்யாணராமன் துவக்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் கணேஷ், துணை முதல்வர் பாலசுப்பிரமணியன், ஐ.பி.ஏ.ஏ., செயலாளர் முரளி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மதுரை, சேலம், நாகை மற்றும் புதுவை, காஞ்சிபுரம், திருநெல்வேலி, வேலுார், திருச்சி, கோவை, ஈரோடு, சென்னை, தஞ்சாவூர் ஆகிய மண்டல அணிகள் பங்கேற்றன.

இறுதிப்போட்டியில், திருநெல்வேலி பி.எஸ்.என்., பாலிடெக்னிக் கல்லுாரி மற்றும் தஞ்சாவூர் கந்தர்வகோட்டை அரசு பாலிடெக்னிக் கல்லுாரி அணிகள் மோதின. பி.எஸ்.என்., பாலிடெக்னிக் கல்லுாரி அணி 40 - 25 என்றபுள்ளிக்கணக்கில் வென்றது.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, கோப்பை, பதக்கத்தை, சங்கரா கல்வி நிறுவன அறங்காவலர் கல்யாணராமன் வழங்கினார். போட்டி ஏற்பாடுகளை, கல்லுாரியின் உடற்கல்வித்துறை இயக்குனர் தினேஷ் செய்திருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us