/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இன்னும் ஒரு மாசத்துக்கு 56வது வார்டு மக்களே வி.ஐ.பி.,கள்! வார்டு பகுதிகளில் இப்போதே துவங்கி விட்டது 'கவனிப்பு'

ADDED : ஏப் 23, 2025 11:16 PM

கோவை; இன்னும் ஒரு மாதத்துக்கு, கோவை மாநகராட்சியின், 56வது வார்டு வாக்காளர்களே நம்மூர் வி.ஐ.பி.,கள். ஏனெனில், அடுத்த மாதம் அந்த வார்டுக்கு இடைத்தேர்தல் வரப்போகிறது. அதற்கான ஏற்பாடுகளை, மாநகராட்சி நிர்வாகம் முனைப்போடு செய்து வருகிறது.
ஒண்டிப்புதுார் மேம்பாலத்துக்கு அருகே அமைந்திருக்கிறது இந்த வார்டு; 16 ஆயிரம் வாக்காளர்கள் வசிக்கின்றனர். குறுக்கு வீதிகள் அதிகமாக காணப்படுகின்றன. இடைத்தேர்தல் வரப்போகிறது என்பதால், மாநகராட்சியில் இருந்து அவசர அவசரமாக நிதி ஒதுக்கப்பட்டு, வேலைகள் செய்யப்பட்டு வருகின்றன. சூர்யா நகரில் மழை நீர் வடிகால் கட்டுவதற்கு இப்போது தான் குழி தோண்டிக் கொண்டிருக்கின்றனர்.
குழாய் பதித்த இடங்களில் 'வெட்மிக்ஸ்' கொட்டி, 'பேட்ச் ஒர்க்' செய்கின்றனர். புது இட்டேரி வீதியில் குறுக்கே கான்கிரீட் பாலம் கட்டப்படுகிறது. மழை நீர் வடிகால் துார்வாரும் பணியும் துவக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கு, ஓட்டுக் கேட்க வருவதற்கு முன், வார்டுக்குள் ஏதேனும் வேலைகள் செய்திருக்க வேண்டும் என்பதற்காக, ஆங்காங்கே மாநகராட்சியால் சில பணிகள் செய்யப்படுகின்றன. ஓராண்டாக மோசமாக இருந்த ரோடு இப்போது தான் செப்பனிடப்படுகின்றன.
சட்டசபை கூட்டத்தொடர் இம்மாதம், 30ம் தேதி வரை நடக்கிறது. மே துவங்கியதும் வார்டு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகும். அதன்பின், ஓட்டு கேட்டு அரசியல் கட்சியினர் வீதி வீதியாக வருவர்.
ஆளுங்கட்சியான தி.மு.க.,வினர், வீடு வீடாக வருவார்கள். அதனால், இன்னும் ஒரு மாதத்துக்கு, 56வது வார்டு மக்களே நம்மூரின் வி.ஐ.பி.,கள்!