/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உணவுத் துறை முதலீட்டு மாநாடு கோவையில் வரும் 29ல் நடக்கிறது
/
உணவுத் துறை முதலீட்டு மாநாடு கோவையில் வரும் 29ல் நடக்கிறது
உணவுத் துறை முதலீட்டு மாநாடு கோவையில் வரும் 29ல் நடக்கிறது
உணவுத் துறை முதலீட்டு மாநாடு கோவையில் வரும் 29ல் நடக்கிறது
ADDED : டிச 23, 2025 05:01 AM
கோவை: தமிழ்நாடு உணவு பதன்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் (டிஎன்அபெக்ஸ்) சார்பில், கோவையில் வரும் 29ம் தேதி, உணவு முதலீட்டு மாநாடு நடக்கிறது.
தமிழகத்தில் உணவு சார் தொழில்களில், முதலீடுகளை ஈர்க்கும் வகையில், டிஎன் அபெக்ஸ் சார்பில், உணவு முதலீட்டு மாநாடு நடக்கிறது. வரும் 29ம் தேதி கோவையில் நடக்கும் மாநாட்டில், வேளாண் மற்றும் உணவு சார் துறைகளில் உள்ள முதலீட்டு வாய்ப்புகளுக்கு, முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.
வேளாண் தொழில்முனைவு, உணவு பதனிடல், தொழில்நுட்பம், வேளாண் மதிப்புச் சங்கிலி ஆகிய துறைகளில், அதிக மதிப்புக் கொண்ட முதலீடுகள், அரசு ஆதரவு, வளர்ச்சிக்கான வாய்ப்புகள் குறித்து விளக்கப்பட உள்ளது.
உள்நாடு மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு சிறந்த முதலீட்டுத்தளமாக இருப்பது, அரசின் பல்வேறு துறைகள் சார்ந்து வழங்கப்படும் திட்டங்கள், மானியங்கள், வசதியாக்கல் சேவைகள் குறித்து விளக்கப்பட உள்ளது.
முதலீட்டாளர்கள், உணவு பதனிடும் துறையில் உள்ளவர்கள், ஏற்றுமதியாளர்கள், எம்.எஸ்.எம்.இ.,கள், தொழில்முனைவோர், உழவர் உற்பத்தியாளர் மன்றங்கள் உள்ளிட்டோர் பங்கேற்கலாம்.
மேலும் விவரங்களுக்கு, 98426 04855, 99947 49622 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

