/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பூ முறுக்கு, கூடை முறுக்கு பண்டிகைக்கு தயார்
/
பூ முறுக்கு, கூடை முறுக்கு பண்டிகைக்கு தயார்
ADDED : அக் 24, 2024 10:08 PM

தற்போது பாரம்பரியமாக செய்து வந்த அதிரசம், சீடை, முறுக்கு, காராசேவ், தானிய உருண்டைகள் ஆகியவற்றை வாங்குவதற்கு மக்கள் ஆர்வம் காட்டினாலும் அவற்றின் தயாரிப்பு குறைவாகவே உள்ளது. இந்நிலையில் கோவை சிவானந்தாகாலனி டாக்டர் சுப்ரமணியன் சாலையில் உள்ள ஜி.கே., சர்வீஸ் என்ற நிர்வாகத்தினர், பாரம்பரிய பலகாரங்களை எந்திரங்களை பயன்படுத்தாமல் கைகளாலேயே தயாரித்து வருகின்றனர். அரசு கூறியுள்ள பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி கையுறை, தலையுறை ஆகியவற்றை அணிந்து கொண்டு சுத்தமான எண்ணையில் பலகாரங்களை தயாரித்து வருகின்றனர்.
25 ஆண்டுகளாக பலகாரங்களை செய்து வரும் இவர்களிடம் பண்டிகை காலங்களில் அதிகபடியான மக்கள் பலகாரங்களை வாங்கி செல்வது வழக்கம். இங்கு பெரும்பாலானோர் பெண்கள் தான் பணிபுரிகின்றனர். எத்தனை ஆர்டர்கள் வந்தாலும் எந்திரங்களை உபயோகிக்காமல் கைகளால் பலகாரங்களை செய்து வருகின்றனர்.
இவர்களிடம் பாரம்பரிய பலகாரங்களான கை முறுக்கு, நெய் முறுக்கு, ரிப்பன் முறுக்கு, தேன் குழல் முறுக்கு, அச்சு முறுக்கு, கல்யாண சீர் முறுக்கு, கோல முறுக்கு என பல வகை முறுக்குகளை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

