/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆண்டுக்கணக்கில் விவசாயிகள் காத்திருப்பு; நிலுவை விண்ணப்பங்களுக்கு எப்போது கிடைக்கும் மின் இணைப்பு?
/
ஆண்டுக்கணக்கில் விவசாயிகள் காத்திருப்பு; நிலுவை விண்ணப்பங்களுக்கு எப்போது கிடைக்கும் மின் இணைப்பு?
ஆண்டுக்கணக்கில் விவசாயிகள் காத்திருப்பு; நிலுவை விண்ணப்பங்களுக்கு எப்போது கிடைக்கும் மின் இணைப்பு?
ஆண்டுக்கணக்கில் விவசாயிகள் காத்திருப்பு; நிலுவை விண்ணப்பங்களுக்கு எப்போது கிடைக்கும் மின் இணைப்பு?
ADDED : டிச 30, 2024 12:34 AM
கோவை; கோவை மாவட்டத்தில், 2007ம் ஆண்டு முதல், சாதாரண வரிசை பிரிவில் இலவச மின் இணைப்புக்காக பதிவு செய்ய, விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
விவசாயத்திற்கு சாதாரண பிரிவு, சுய நிதி பிரிவு என்ற இரு பிரிவுகளில் இலவச மின் இணைப்பு அரசால் வழங்கப்படுகிறது. சாதாரண பிரிவில் மின்வழித்தட செலவு, மின் வினியோகம் அனைத்தும் இலவசம்.
சுயநிதி பிரிவில் மின்சாரம் இலவசம். வழித்தட செலவில் ஒரு பகுதியை விவசாயிகள் ஏற்க வேண்டும். சுயநிதி பிரிவில், 'தட்கல்' எனப்படும் விரைவு முறையில் விண்ணப்பிக்கும் விவசாயிகள், வழித்தட முழு செலவினத்தையும் ஏற்க வேண்டும்.
மாநிலம் முழுவதும், இலவச இணைப்புக்கு ஏராளமான விவசாயிகள் ஆண்டுக்கணக்கில் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவையில், 2007, 2009ம் ஆண்டுகளில் சாதாரண பிரிவில் விண்ணப்பித்த விவசாயிகள், தற்போது வரை இணைப்புக்கு காத்திருக்கின்றனர். தவிர, தட்கல் முறையில் முழு பணத்தை செலுத்திய விவசாயிகளும் காத்திருக்கின்றனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் கந்தசாமி கூறுகையில், '' 2007-2008 முதல் சாதாரண வரிசையில் பதிவு செய்த விவசாயிகள் காத்திருக்கின்றனர். அதே போன்று, 2013ல் சுய நிதி பிரிவில் பதிவு செய்தவர்கள், 2022ல் தட்கல் முறையில் பதிவு செய்தவர்களும் காத்திருக்கின்றனர்.
தட்கல் என்பது உடனடியாக வழங்கவேண்டும். முழு பணத்தையும பெற்றுக்கொண்டு ஆண்டுக்கணக்கில் காத்திருப்பதை, எப்படி தட்கல் என்று கூற முடியும்.
தலைமை பொறியாளர், கலெக்டர் அனைவரையும் அணுகி பல முறை கேட்டும் நடவடிக்கை இல்லை,'' என்றார்.
கோவை மண்டல மின்வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'கோவையில் கடந்த மூன்று ஆண்டுகளில், 10,099 விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இணைப்புகள் வழங்கப்படவில்லை என்பது தவறு. நிலுவையில் விண்ணப்பங்கள் இருப்பது உண்மை.
சாதாரண வரிசை திட்டத்தின் கீழ், 2013 மார்ச் 31 வரை பதிவு செய்து 2022 மே 31 வரை தயார்நிலை பதிவு செய்தவர்களுக்கும், சுயநிதி திட்டத்தின் கீழ், 2018 மார்ச் 31 வரை பதிவு செய்து 2024 மார்ச் 31 வரை தயார்நிலை பதிவு செய்தவர்களுக்கும், தட்கல் திட்டத்தின் கீழ், 2024 மார்ச் 31 வரை பதிவு செய்த விண்ணப்பங்களுக்கும், மின் இணைப்புகள் வழங்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன' என்றார்.

