/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழிலதிபர், ஓய்வு பெற்ற அதிகாரி வீடுகளில் அமலாக்க துறை சோதனை
/
தொழிலதிபர், ஓய்வு பெற்ற அதிகாரி வீடுகளில் அமலாக்க துறை சோதனை
தொழிலதிபர், ஓய்வு பெற்ற அதிகாரி வீடுகளில் அமலாக்க துறை சோதனை
தொழிலதிபர், ஓய்வு பெற்ற அதிகாரி வீடுகளில் அமலாக்க துறை சோதனை
ADDED : செப் 10, 2025 03:48 AM

கோவை:வங்கி கடனை ஒரே நேரத்தில் செலுத்தியதால், கோவையை சேர்ந்த ஜவுளி தொழிலதிபர் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
கோவை மாவட்டம், சூலுார், செலக்கரிச்சலை சேர்ந்தவர் ராமச்சந்திரன், 50; ஜவுளி, கோழிப்பண்ணை உட்பட பல்வேறு தொழில்களை மேற்கொள்கிறார். இவரது மகன் வெங்கடேஷ், தி.மு.க., மாணவரணி ஒன்றிய செயலர்.
ராமச்சந்திரன் வீட்டுக்கு நேற்று காலை மூன்று கார்களில் வந்த, 15 அமலாக்கத்துறை அதிகாரிகள், சோதனையில் ஈடுபட்டனர். மத்திய பாதுகாப்பு படையை சேர்ந்த 30 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சில மாதங்களுக்கு முன், வங்கிகளில் பெற்ற கடனை ஒரே நேரத்தில் ராமச்சந்திரன் செலுத்தியதாகவும், அந்த பணம் எப்படி வந்தது என்பது குறித்தே, அமலாக்கத்துறை சோதனை நடத்தியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மாலையிலும் சோதனை தொடர்ந்தது.
அதே போல, திருநெல்வேலி, தியாகராஜநகர் பகுதியில் வசிக்கும் சிவசுப்பிரமணியன், கோவையில் வங்கி அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். பணிக்காலத்தில் வங்கியில் ஒருவர் இவரிடம் போலி ஆவணம் சமர்ப்பித்து கடன் பெற்றிருந்தார்.
இதுகுறித்த புகாரில் இவரது வீட்டில் நேற்று மதுரை மற்றும் சென்னையில் இருந்து வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். காலை முதல் இரவு வரை நடந்த சோதனையில் ஆவணங்கள், 50 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.