/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீதிகளில் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு: விதிமீறலை தடுக்க ஆய்வு அவசியம்
/
வீதிகளில் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு: விதிமீறலை தடுக்க ஆய்வு அவசியம்
வீதிகளில் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு: விதிமீறலை தடுக்க ஆய்வு அவசியம்
வீதிகளில் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு: விதிமீறலை தடுக்க ஆய்வு அவசியம்
ADDED : மார் 12, 2024 09:55 PM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி, சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில், தோட்டம் அமைத்தும், கார் 'பார்க்கிங்' அமைத்தும் வீதிகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன.
சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட புதிய குடியிருப்பு பகுதிகளில், வீடுகளின் கட்டுமானம் நாளுக்குள் நாள் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப, வீதிகளில் புதிதாக தார் சாலைகள் அமைக்கப்பட்டும், தெருவிளக்குள் அமைத்தும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இருப்பினும், பெரும்பாலான குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் கிடையாது. வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், சுற்றுச்சுவர் ஒட்டி அமைக்கப்படும் 'ரிங்' மற்றும் ஓடைக்கல் கொட்டி, நிலத்திற்குள் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் சில குடியிருப்பு பகுதிகளில், தோட்டம் மற்றும் 'கார் பார்க்கிங்' அமைத்து, வழித்தடம் ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது.
மக்கள் கூறியதாவது:
சில பகுதிகளில், மழைநீர் வழிந்தோடும் ஓடைகள் மாயமாகி விட்டன. மனைப்பிரிவு அமைக்கப்படும்போது, ஓடைகள் ஆக்கிரமிப்பு செய்யப்படுகின்றன. இது ஒருபுறமிருக்க, அவரவர் குடியிருப்பு வீடுகளை ஒட்டிய வழித்தடத்தை ஆக்கிரமித்து, தோட்டம் மற்றும் 'கார் பார்க்கிங் செட்' அமைக்கின்றனர்.
இதனால், அவசர தேவைக்கு அவ்வழித்தடத்தைக் கடந்து செல்லும் மக்கள் பாதிக்கின்றனர். அதேபோல, அனுமதிக்கு மாறாகவும் புதிய கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. விதிமீறலைக் கண்டறிந்து தடுக்க, பேரூராட்சி நிர்வாகத்தினர், அவ்வபோது ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

