/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சக்கர நாற்காலி வழங்காத ஊழியர்கள் 'சஸ்பெண்ட் '
/
சக்கர நாற்காலி வழங்காத ஊழியர்கள் 'சஸ்பெண்ட் '
ADDED : செப் 11, 2025 03:29 AM
கோவை:கோவை அரசு மருத்துவமனைக்கு வந்த, 84 வயது நோயாளிக்கு சக்கர நாற்காலி வழங்காத மேற்பார்வையாளர்கள் இருவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
கோவை, சவுரிபாளையத்தைச் சேர்ந்தவர் வடிவேல், 84; நீரிழிவு நோயாளி. நேற்று முன்தினம், அரசு மருத்துவமனையின், 'மல்டி ஸ்பெஷாலிட்டி' கட்டடத்தின் மூன்றாவது தளத்துக்கு செல்ல அவரது மகன் காளிதாஸ், 57, அழைத்து வந்திருந்தார்.
நடக்க முடியாத நிலையில் இருந்த தன் தந்தைக்கு, சக்கர நாற்காலி கேட்டார் காளிதாஸ். ஊழியர்கள் வழங்கவில்லை. சக்கர நாற்காலி வழங்க, லஞ்சம் கேட்டதாக காளிதாஸ் புகார் தெரிவித்தார். இதுதொடர்பாக, செய்தி வெளியானது. துறை ரீதியாக விசாரணை நடத்திய, மருத்துவமனை டீன் கீதாஞ்சலி, அன்றைய தினம் மேற்பார்வையாளர்களாக இருந்த தற்காலிக பணியாளர்கள் மாணிக்கவாசகம், எஸ்தர் ராணி ஆகிய இருவரை, ஐந்து நாட்களுக்கு, 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.