/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதைவடங்களில் பணியா; மின் வாரியம் எச்சரிக்கை
/
புதைவடங்களில் பணியா; மின் வாரியம் எச்சரிக்கை
ADDED : செப் 09, 2025 10:46 PM
கோவை; தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக, கோவை மாநகர் மேற்பார்வை பொறியாளர் அறிக்கை:
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், மின் வாரியத்துக்கு சொந்தமான புதைவடங்களில், பொதுமக்கள் மற்றும் பிற துறையினரால் பணிகள் மேற்கொள்ளும்போது, அருகில் உள்ள மின் வாரிய அலுவலர்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்; கூட்டாய்வு செய்து உறுதி செய்த பின்பே, பணிகள் மேற்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில், அதனால் ஏற்படும் மின் விபத்துகளுக்கு மின் வாரியம் பொறுப்பேற்காது.
இதர துறையினர் மற்றும் பொதுமக்கள் சாலைகளை தோண்டும்போது, புதைவடங்களில் பழுது காரணமாக ஏற்படும் மின் விபத்து, பொருள் சேதம் மற்றும் மின் தடைக்கு, அந்தந்த துறையினர் மற்றும் பொதுமக்களே பொறுப்பாவர்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.