/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டிரைவரை தாக்கி கார் பறிப்பு; 12 மணி நேரத்தில் மீட்ட போலீசார்
/
டிரைவரை தாக்கி கார் பறிப்பு; 12 மணி நேரத்தில் மீட்ட போலீசார்
டிரைவரை தாக்கி கார் பறிப்பு; 12 மணி நேரத்தில் மீட்ட போலீசார்
டிரைவரை தாக்கி கார் பறிப்பு; 12 மணி நேரத்தில் மீட்ட போலீசார்
ADDED : டிச 23, 2024 04:05 AM

மேட்டுப்பாளையம் : காரமடையில் டிரைவரை தாக்கி காரை பறித்து சென்ற நபரை 12 மணி நேரத்தில், போலீசார் கைது செய்தனர்.கோவையை சேர்ந்தவர் அறிவழகன், 40; டாக்ஸி டிரைவர். நேற்று முன்தினம் இரவு, 7:45 மணிக்கு, சரவணம்பட்டி அருகே காரில் அமர்ந்திருந்தார்.
அப்போது மேட்டுப்பாளையம் மகாதேவபுரத்தை சேர்ந்த தனுஷ், 20, அறிவழகனிடம், 'ஊட்டி செல்ல வேண்டும்; வாடகை எவ்வளவு' என கேட்டுள்ளார். மேலும் தனது கார் ரிப்பேர் ஆகிவிட்டதாகவும், அதனால் இந்த காரை ஓரங்கட்டி விட்டு, உங்களது டாக்ஸியில் வாடகைக்கு வருகிறேன் என கூறியுள்ளார். காரமடை வழியாக மருதூருக்கு சென்றார்.
அப்போது, அறிவழகனின் கழுத்தில் சிறு கத்தி வைத்து கீறி விட்டு, அவரை கீழே தள்ளிவிட்டு டாக்ஸியை எடுத்து தப்பித்து விட்டார். இதுகுறித்து அறிவழகன் காரமடை போலீசாரிடம் புகார் அளித்தார். புகார் அளித்த உடன் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மற்றும் காரமடை போலீசார் நடவடிக்கை எடுத்து, 12 மணி நேரத்தில் இச்சம்பவத்தில் ஈடுபட்ட தனுஷை கைது செய்து, காரை பறிமுதல் செய்து ஒப்படைத்தனர்.

