sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பரிந்துரைக்காத இடுபொருட்கள் தென்னைக்கு வேண்டாம்! வேளாண் துறையினர் அறிவுறுத்தல்

/

பரிந்துரைக்காத இடுபொருட்கள் தென்னைக்கு வேண்டாம்! வேளாண் துறையினர் அறிவுறுத்தல்

பரிந்துரைக்காத இடுபொருட்கள் தென்னைக்கு வேண்டாம்! வேளாண் துறையினர் அறிவுறுத்தல்

பரிந்துரைக்காத இடுபொருட்கள் தென்னைக்கு வேண்டாம்! வேளாண் துறையினர் அறிவுறுத்தல்


ADDED : நவ 06, 2025 11:13 PM

Google News

ADDED : நவ 06, 2025 11:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: தென்னை மரங்களுக்கு பரிந்துரைக்கப்படாத இடுபொருட்களை பயன்படுத்த வேண்டாம் என, கோவை மாவட்ட வேளாண்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

கோவை மாவட்ட வேளாண்துறை கூறியிருப்பதாவது:

பூச்சி மருந்துகள் சட்டம், 1968 மற்றும் பூச்சி மருந்துகள் விதி, 1971 வேளாண் பயிர்களில் சரியான பூச்சி மருந்து மற்றும் பூஞ்சாண கொல்லிகள் பயன்படுத்துவதை உறுதி செய்கிறது.

அதன்படி, ஒன்றுக்கு மேற்பட்ட பூச்சிக்கொல்லிகளை தனித்தனியாக வாங்கி, ஒன்றுடன் ஒன்று கலந்து பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

மத்திய அரசின் மத்திய பூச்சி மருந்து வாரியம் மற்றும் பதிவு செய்தல் குழுவில், (CIB & RC) பதிவு செய்யப்பட்ட, ஒன்றுக்கு மேற்பட்ட இணக்கமான பூச்சிக் கொல்லிகள் மற்றும் பூஞ்சாண கொல்லிகளை மட்டுமே பரிந்துரை செய்யப்பட்ட சரியான பயிர்களில், பூச்சி மற்றும் நோய் மேலாண்மைக்கு பயன்படுத்த வேண்டும்.

பரிந்துரை செய்யப்படாத பூச்சி மருந்துகள் மற்றும் இதர இடுபொருட்களை, தென்னையில் பயன்படுத்தினால் அதிக காய்கள் மற்றும் விளைச்சல் உண்டாகும் என, உரிமம் பெறாத தனியார் மற்றும் சமூக வலைதள விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம்.

மேலும், வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில், குறைவான விலையில் தரமான உயிர் உரங்கள், உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் மற்றும் நுண்ணுாட்ட உரங்கள் விற்பனை செய்யப்படுகிறது. அவற்றை வாங்கி பயன் பெறலாம்.

தென்னை மரங்களைத் தாக்கும் 'ரூகோஸ்' சுருள் வெள்ளை 'ஈ' க்களை மேலாண்மை செய்ய, இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கழகம் மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகமும் எவ்விதமான பூச்சிக் கொல்லிகளையும் பரிந்துரை செய்வதில்லை.

வேளாண் மற்றும் தோட்டக்கலை துறைகள் வாயிலாக, உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் மற்றும் இயற்கை தாவர பூச்சிக் கொல்லிகள் மட்டுமே பரிந்துரை செய்யப்படுகிறது. அவ்வப்போது விழிப்புணர்வும் செய்யப்படுகிறது.

ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களுக்கு மேலாண்மைக்கான ஒருங்கிணைந்த முறைகள்:

மஞ்சள் நிற பாலித்தீன் தாள்களில், தாவர எண்ணையை தடவி இரு மரங்களுக்கிடையே, ஆறு அடி உயரத்தில் ஏக்கருக்கு, 10 என்ற எண்ணிக்கையில் தொங்க வைத்து பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும்.

பூச்சிகளின் பரவலைக் குறைக்க, மட்டைகளில் உள்ள ஓலைகளின் அடிப்புறத்தில் தண்ணீரை பாய்ச்சி தெளிக்க வேண்டும்.

கிரைசோபிட் எனும் பச்சைக் கண்ணாடி பூச்சி இரை விழுங்கிகளை ஹெக்டேருக்கு, 1000 என்ற எண்ணிக்கையில் விட வேண்டும்.என்கார்சியா ஒட்டுண்ணியால் பாதிக்கப்பட்ட தென்னை ஓலைகளை ஏக்கருக்கு, 10 என்ற எண்ணிக்கையில் தாக்குதலுக்கு உட்பட்ட தென்னை ஓலைகளுடன் இணைக்க வேண்டும்.தாவரப் பூச்சிக் கொல்லிகளான வேப்பெண்ணைய், 30 மி.லி., அல்லது அசாடிராக்டின் 1 சதவீதம் மருந்தினை 1 மி.லி., அளவில் ஒட்டும் திரவத்துடன் கலந்து, தென்னை ஓலையின் அடிப்பகுதியில் நன்கு நனையும் படி தெளிக்க வேண்டும்.

பூச்சிகளின் எச்சத்தினால் ஓலைகளின் மீது வளரும் கரும்பூசணத்தை சரிசெய்ய, மைதா மாவுக் கரைசலை தென்னை ஓலைகள் நன்கு நனையும் படி தெளிக்க வேண்டும்.

பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தும் போது, நன்மை செய்யும் இயற்கை எதிரிகள் அழிந்து விடுவதால், பூச்சிக் கொல்லிகள் பயன்பாட்டினை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

பரிந்துரைக்கப்படும் ஊட்டசத்துகள் ஒவ்வொரு மரத்திற்கும் யூரியா 1.25 கிலோ, சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் -2 கிலோ, மூரியேட் ஆப் பொட்டாஷ் - 3.5 கிலோ, போரான் - 50 கிராம், மக்னீசியம் சல்பேட் - 500 கிராம் ஆகியவற்றினை வேப்பம் பிண்ணாக்கு -5 கிலோ மற்றும் நன்கு மக்கிய 50 கிலோ தொழு உரத்துடன் கலக்க வேண்டும். பின், இரண்டு பாகங்களாக. ஆண்டுக்கு இரண்டு முறை 6 மாத இடைவெளியில் மரங்களின் அடிப்பகுதியில் இருந்து, 2 முதல் 3 அடி இடைவெளி விட்டு இட வேண்டும்.

மேலும் மரங்களைச் சுற்றி பசுந்தழை உரப்பயிர்களான சணப்பை அல்லது தக்கைப்பூண்டு விதைத்து, பின் 45ம் நாளில் மடக்கி உழுவதால், மண் வளம், மண்ணின் வாயிலாக பரவும் நோய்களை வெகுவாகக் குறைக்கலாம்.

இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us