/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேர்தலுக்கு தயாராகிறது தி.மு.க. தொகுதி அலுவலகங்கள் திறப்பு
/
தேர்தலுக்கு தயாராகிறது தி.மு.க. தொகுதி அலுவலகங்கள் திறப்பு
தேர்தலுக்கு தயாராகிறது தி.மு.க. தொகுதி அலுவலகங்கள் திறப்பு
தேர்தலுக்கு தயாராகிறது தி.மு.க. தொகுதி அலுவலகங்கள் திறப்பு
ADDED : டிச 28, 2025 05:01 AM
கோவை: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து, கோவை தி.மு.க. சார்பில் ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல் அலுவலகம் திறக்கப்படுகிறது. சிங்காநல்லுாருக்கான அலுவலகத்தை முன்னாள் அமைச்சர் பொங்கலுார் பழனிசாமி திறந்து வைத்தார்.
கோவை மாவட்டத்துக்கான வரைவு வாக்காளர் பட்டியலை ஓட்டுச்சாவடி வாரியாக சரிபார்க்கும் பணியில் தி.மு.க.வினர் ஈடுபட்டு வருகின்றனர். இறுதி பட்டியல் வெளியிடுவதற்கு முன் விடுபட்டவர்களையும், புதிய வாக்காளர்களையும் இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பணியை தொகுதி வாரியாக ஒருங்கிணைக்கவும், தேர்தல் பணிமனையாக பயன்படுத்தவும் ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியாக அலுவலகம் அமைக்கப்படுகிறது.
மாநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் சிங்காநல்லுாருக்கான அலுவலகம் காமராஜர் ரோடு ராமானுஜர் நகரில் திறக்கப்பட்டது. மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜி முன்னிலையில் முன்னாள் அமைச்சர் பொங்கலுார் பழனிசாமி திறந்து வைத்தார்.
செந்தில்பாலாஜி பேசுகையில், ''29ம் தேதி கோவை வரும் முதல்வர் ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்க வேண்டும். லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., - பா.ஜ., பெற்ற ஓட்டுகளை கண்காணித்து, மாற்று சிந்தனையில் உள்ள மக்களை சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்ய வேண்டும். இத்தொகுதியில் உள்ள 2.54 லட்சம் வாக்காளர்களையும் பூத் கமிட்டியினர் சந்திக்க வேண்டும். 10 தொகுதிகளிலும் நிச்சயம் வெற்றி பெறுவோம். முதல் வெற்றியை சிங்காநல்லுார் பதிவு செய்ய வேண்டும்,'' என்றார்.
மாநகர் மாவட்ட பொறுப்பாளர் செந்தமிழ் செல்வன், எம்.பி. ராஜ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக், மாணவரணி மாநில செயலாளர் ராஜிவ்காந்தி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை செயலாளர் மீனா ஜெயக்குமார், மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் லக்குமி இளஞ்செல்வி உட்பட பலர் பங்கேற்றனர்.

