/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தி.மு.க. குடும்ப அரசியலுக்கு கடைசி தேர்தல் ! எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி
/
தி.மு.க. குடும்ப அரசியலுக்கு கடைசி தேர்தல் ! எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி
தி.மு.க. குடும்ப அரசியலுக்கு கடைசி தேர்தல் ! எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி
தி.மு.க. குடும்ப அரசியலுக்கு கடைசி தேர்தல் ! எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி
ADDED : செப் 10, 2025 12:22 AM
பொள்ளாச்சி: ''தி.மு.க.வின் குடும்ப அரசியலுக்கு இது தான் கடைசி தேர்தல்,'' என, எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.
பொள்ளாச்சியில் இன்று, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பழனிசாமி, 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகளை பார்வையிட்ட, எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் நிருபர்களிடம் கூறியதாவது:
தி.மு.க. ஆட்சி மீது மக்களுக்கு நாளுக்கு நாள் அதிருப்தி அதிகரித்து வருகிறது. எப்போது தேர்தல் வரும்; அ.தி.மு.க. ஆட்சி எப்போது மலரும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
சொந்த பலம் இல்லாத தி.மு.க. கூட்டணி கட்சிகளை வைத்து வெற்றி பெறலாம் என மணக்கணக்கு போடுகின்றனர். தி.மு.க.வுக்கு வரும் சட்டசபை தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்ட உள்ளனர். தி.மு.க. குடும்ப அரசியலுக்கு இது கடைசி தேர்தலாக இருக்கும்.
கட்சியும், ஆட்சியும் ஒரு குடும்பத்தினருக்குத்தான் என்பது, தி.மு.க.வின் பரம்பரை வழக்கம்.தி.மு.க.வில் மூத்த தலைவர்களை பின்னுக்கு தள்ளி, உதயநிதியை முன்நிறுத்துகின்றனர். இது, தி.மு.க. மூத்த தலைவர்கள் மன வேதனை அடைகின்றனர்.
இது தான், கடைசி அறுவடை என துணிந்து தவறுக்கு மேல் தவறு செய்கிறார். இது தான் ஸ்டாலின் மாடல்.
பொள்ளாச்சி நகராட்சி, திருப்பூர் மாநகராட்சியில் மாத கணக்கில் குப்பை தேக்கி வைத்து, மக்களுக்கு துர்நாற்றத்தை பரிசாக தருகின்றனர்.
குப்பையை அகற்றாமல், கணக்கு புத்தகத்தில் குப்பையை அகற்றியதாக கோடியில் வருமானம் பார்க்கின்றனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.