/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
4வது நாளாக ரேஷன் கடைகளில் ஏமாற்றம்
/
4வது நாளாக ரேஷன் கடைகளில் ஏமாற்றம்
ADDED : ஜன 14, 2025 06:31 AM
அன்னுார்; பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் வேட்டி சேலை வினியோகம் கடந்த 10ம் தேதி துவங்கியது. அன்னுார் தாலுகாவில் 66 ஆயிரத்து 507 ரேஷன் கார்டு தாரர்கள் உள்ளனர்.கடந்த 10ம் தேதி மட்டும் ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் தலா 200 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் வேட்டி சேலை வழங்கப்பட்டது.
அதன் பிறகு பெரும்பாலான கடைகளில் சேலை வழங்கப்படவில்லை. வேட்டி மட்டும் சில கடைகளில் வழங்கப்பட்டது. நான்காவது நாளாக நேற்றும் ரேஷன் கடைகளுக்கு சென்ற ரேஷன் கார்டுதாரர்கள் வேட்டி சேலை வரவில்லை என்றவுடன் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இதுகுறித்து பசூர் மக்கள் கூறுகையில்,பொங்கலுக்கு ஆயிரம் ரூபாய் ரொக்கம் தர வில்லை. வேட்டி சேலையாவது வாங்கி பொங்கலை கொண்டாடலாம் என்று எதிர்பார்த்து இருந்தோம். அதுவும் கிடைக்கவில்லை. 14, 15 ஆகிய இரண்டு நாட்களும் ரேஷன் கடைகள் விடுமுறை. எனவே இனி பொங்கல் முடிந்த பிறகு தான் வேட்டி சேலை வாங்க முடியும்,' என்றனர்.

