/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மழை அளவு தெரிவதில் சிக்கல்! 14 மழைமானிகள் பழுது ; சரிசெய்வதில் சுணக்கம்
/
மழை அளவு தெரிவதில் சிக்கல்! 14 மழைமானிகள் பழுது ; சரிசெய்வதில் சுணக்கம்
மழை அளவு தெரிவதில் சிக்கல்! 14 மழைமானிகள் பழுது ; சரிசெய்வதில் சுணக்கம்
மழை அளவு தெரிவதில் சிக்கல்! 14 மழைமானிகள் பழுது ; சரிசெய்வதில் சுணக்கம்
ADDED : அக் 24, 2024 11:44 PM

கோவை : கோவையிலுள்ள,11 தாலுகா அலுவலகங்கள், 12 ஒன்றிய அலுவலகங்கள் மட்டுமல்லாமல் மூன்று பொது இடங்களில் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும், 36 தானியங்கி மழை மானியில்,14 பழுதுபட்டு இருப்பதால் மழையளவு தகவல்களை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிப்பதில் சுணக்கமும் குழப்பமும் ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்திலுள்ள, 11 தாலுகா அலுவலகங்கள், 12 ஒன்றிய அலுவலகங்கள் மட்டுமல்லாமல் மூன்று பொது இடங்களில் மழைமானி வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக, 36 தானியங்கி மழை மானிகள் தருவிக்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது.
அதில் 14 பழுதுபட்டு இருப்பதால் மழையளவு தகவல்களை மாவட்டநிர்வாகத்துக்கு தெரிவிப்பதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்யும் முயற்சியை கோவை கலெக்டர் அலுவலகத்திலுள்ள பேரிடர் மேலாண்மைத்துறை மேற்கொண்டது.
அதிகாரிகள் கள ஆய்வு செய்து, 14 தானியங்கி மழைமானிகளை மாற்றி அமைக்க அரசுக்கு கடிதம் அனுப்பினர். ஆனால் இன்னும் பதிலோ, நிதியோ வரவில்லை.
இது குறித்து கோவை மாவட்ட பேரிடர் துறை அதிகாரிகள் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில், 36 இடங்களில் மழை மற்றும் வெப்பம் காலநிலையை தெரிந்து கொள்வதற்காக காலநிலை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
அதில் மழைமானி, ஈரப்பத அளவீடு, காற்றின்வேகம், வெப்பம் உள்ளிட்ட முழுமையான காலநிலையை அறிந்து கொள்ளும் வகையிலான அனைத்து கருவிகளும் வைக்கப்பட்டிருக்கும்.
ஆனால் இதில் தானியங்கி மழைமாணி மட்டும், 14 இடங்களில் பழுதுபட்டு உள்ளது. அவற்றை சரிசெய்வதற்கு பதிலாக புதிய டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய மழைமானியை நிறுவுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அவை விரைவில் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு கூறினர்.

