/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்லாபுரம் ரோ-ட்டில் மேம்பாட்டு பணி
/
கல்லாபுரம் ரோ-ட்டில் மேம்பாட்டு பணி
ADDED : டிச 13, 2025 07:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தால், கொழுமம் - கல்லாபுரம் ரோடு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த ரோட்டில், 2.4 கி.மீ.,ல், 5 கி.மீ., வரை ஓடுதளம் அடிக்கடி சேதமடைந்து வந்தது.
இதனால், வாகன போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, சி.ஆர்.ஐ.டி.பி., திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக, 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஓடுதளம் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விரைவில், இதர மாவட்ட இதர சாலைகளிலும் புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என, நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.

