/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளிகளில் பல் சுகாதார விழிப்புணர்வு முகாம் நிறைவு
/
பள்ளிகளில் பல் சுகாதார விழிப்புணர்வு முகாம் நிறைவு
பள்ளிகளில் பல் சுகாதார விழிப்புணர்வு முகாம் நிறைவு
பள்ளிகளில் பல் சுகாதார விழிப்புணர்வு முகாம் நிறைவு
ADDED : செப் 08, 2025 10:49 PM

சூலுார்; பள்ளிகளில் மாணவர்களின் பல் சுகாதார விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம் நிறைவு விழா சூலுாரில் நடந்தது.
நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தின் கீழ், சூலுார் வட்டாரத்தில், ஆர்.வி.எஸ்., பல் மருத்துவ கல்லுாரி, புரோபல் நிறுவனத்தின் சார்பில், பல் சுகாதார விழிப்புணர்வு மருத்துவ முகாம், 81 பள்ளிகளில் நடத்தப்பட்டது.
15 ஆயிரத்து, 300 மாணவ, மாணவிகளுக்கு பற்கள் பரிசோதனை நடத்தப்பட்டு, மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இந்த முகாமின் நிறைவு விழா சூலுார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. கலெக்டர் பவன்குமார் தலைமை வகித்தார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று பேசுகையில், தனியார் நிறுவனங்களின் சமுதாய பங்களிப்பு நிதியில் பள்ளி கல்வித்துறை பல பணிகளை மேற்கொண்டு வருகிறது. 400 நிறுவனங்கள் இத்திட்டத்தில் இணைந்துள்ளன.
இப்பகுதியில், இரு நிறுவனங்கள் சார்பில், நடத்தப்பட்ட பல் சுகாதார விழிப்புணர்வு மருத்துவ முகாமில், 9 ஆயிரத்து, 300 மாணவ, மாணவியர் பயன்பெற்றுள்ளனர், என்றார்.
முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, தொழிலதிபர்கள் குப்புசாமி, வரதராஜ், மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பல் மருத்துவக்கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.