/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வருவாய் வழி திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு
/
வருவாய் வழி திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு
வருவாய் வழி திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு
வருவாய் வழி திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு
ADDED : மார் 09, 2024 07:29 AM

உடுமலை : உடுமலையில், தேசிய வருவாய் வழி திறனறித்தேர்வில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
அரசுப்பள்ளிகளில், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, தேசிய வருவாய்வழி திறனறித்தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, அவர்களின் மேல்நிலைக்கல்வி நிறைவு பெறும் வரை, ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
உடுமலை வட்டாரத்தில், ஆறு மாணவர்கள் இத்தேர்வில் நடப்பாண்டில் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா, பார்க் ரோடு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்தது.
வட்டாரக்கல்வி அலுவலர் சரவணக்குமார் வரவேற்றார். மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் ஜெகதீசன், ஆசிரியர்களை ஊக்கப்படுத்தி பேசினார்.
தொடர்ந்து போடிபட்டி, கிளுவன்காட்டூர், வெஞ்சமடை, பள்ளபாளையம், அந்தியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளைச்சேர்ந்த திறனாய்வு தேர்வில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்பட்டது.
மேலும், திறனாய்வு மாதிரி தேர்வில், முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், சான்றிதழ்கள், கேடயம் வழங்கப்பட்டன.
அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது பெற்ற, தலைமையாசிரியர் இன்பக்கனிக்கு ஆசிரியர்கள், வட்டார கல்வி அலுவலர் ஆறுமுகம், மனோகரன் வட்டார வள மேற்பார்வையாளர் சண்முகசுந்தரம் பாராட்டு தெரிவித்தனர்.

