/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
யோகாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
/
யோகாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : மார் 27, 2025 11:44 PM

பொள்ளாச்சி:'கேலோ இன் மற்றும் எஸ்.ஜி.ஏ.எப்.ஐ.,' சார்பில், மாநில அளவிலான யோகா போட்டி, மதுரையில் நடந்தது. இதில், பொள்ளாச்சி ஜமீன்முத்துார் ஏ.ஆர்.பி., இன்டர்நேஷனல் பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
அதில், 6 வயது பிரிவில் துருவா, 8 வயது பிரிவில் தக் ஷன், எழிலினி, தயான் அகமது; 10 வயது பிரிவில் புகழ்மதி தன்யா, கவுசிகா, ரிதன்யா, அனன்யா ஸ்ரீநிதி; 12 வயது பிரிவில் ஸ்ரீ சாய் ஆகியோர் முதலிடமும், சக்திவேல், ஆதிஷ், செந்தில்குமார் ஆகியோர் இரண்டாமிடம் பிடித்து வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பள்ளி தாளாளர் சுப்ரமணியம், செயலாளர் தமிழ்செல்வன், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்து வாழ்த்தினர்.

