/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விற்பனை கூடத்துக்கு மக்காச்சோளம் வரத்து துவக்கம் 'இ-நாம்' திட்டத்தில் ஏலம்
/
விற்பனை கூடத்துக்கு மக்காச்சோளம் வரத்து துவக்கம் 'இ-நாம்' திட்டத்தில் ஏலம்
விற்பனை கூடத்துக்கு மக்காச்சோளம் வரத்து துவக்கம் 'இ-நாம்' திட்டத்தில் ஏலம்
விற்பனை கூடத்துக்கு மக்காச்சோளம் வரத்து துவக்கம் 'இ-நாம்' திட்டத்தில் ஏலம்
ADDED : டிச 25, 2025 06:15 AM

குடிமங்கலம்: பெதப்பம்பட்டி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், 'இ-நாம்' திட்டத்தின் கீழ் மக்காச்சோளம் ஏலம் விடப்பட்டது.
குடிமங்கலம் வட்டாரத்தில், பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்துக்கு, மக்காச்சோளம் பிரதானமாக சாகுபடி செய்யப்பட்டது. தற்போது சில பகுதிகளில் அறுவடை துவங்கியுள்ளது.
மக்காச்சோளத்தை பெதப்பம்பட்டி ஒழுங்கு முறை விற்பனை கூடத்திலுள்ள உலர்களங்களில் காய வைத்து, இருப்பு அல்லது விற்பனை செய்ய, விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதையடுத்து, நடப்பு அறுவடை சீசனுக்கு, மக்காச்சோளம் வரத்து ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு துவங்கியுள்ளது. நேற்று இ-நாம் திட்டத்தின் கீழ், மக்காச்சோளம் ஏலம் விடப்பட்டது. மொத்தம், 19 ஆயிரத்து 400 மெட்ரிக்., டன் ஏலம் விடப்பட்டது.
இதில், நுாறு கிலோ கொண்ட மூட்டைக்கு அதிகபட்சமாக ரூ. 2,020 விலை கிடைத்தது.
ஒழுங்கு முறை விற்பனைக்கூட அதிகாரிகள் கூறியதாவது: பெதப்பம்பட்டி ஒழுங்கு முறை விற்பனைக்கூட வளாகத்தில், மக்காச்சோளத்தை காய வைக்க தேவையான உலர்களங்கள் உள்ளன. இரவில் தங்கும் விவசாயிகளுக்கு தேவையான வசதிகளும், களத்தில் மின்விளக்கு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
காய வைத்து இ-நாம் திட்டத்தின் கீழ் ஏலம் விடலாம். இடைத்தரகர்கள் இல்லாமல், நேரடியாக ஏலம் விடப்படுகிறது. மேலும், ஒழுங்கு முறை விற்பனை கூட குடோன்களில், மக்காச்சோளத்தை இருப்பு வைக்கும் விவசாயிகளுக்கு பொருளீட்டு கடனும் பெற்றுத்தரப்படும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.

