/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை அஞ்சல் பிரிப்பக 'முகவரி' மாறியது! இடப்பற்றாக்குறையால் தபால் துறை நடவடிக்கை
/
கோவை அஞ்சல் பிரிப்பக 'முகவரி' மாறியது! இடப்பற்றாக்குறையால் தபால் துறை நடவடிக்கை
கோவை அஞ்சல் பிரிப்பக 'முகவரி' மாறியது! இடப்பற்றாக்குறையால் தபால் துறை நடவடிக்கை
கோவை அஞ்சல் பிரிப்பக 'முகவரி' மாறியது! இடப்பற்றாக்குறையால் தபால் துறை நடவடிக்கை
ADDED : ஜன 22, 2025 12:31 AM
கோவை; கோவை ரயில் நிலைய வளாகத்தில் செயல்பட்டு வந்த, கோவை அஞ்சல் பிரிப்பகம், இடப்பற்றாக்குறையால், கவுண்டம்பாளையம் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
கோவை ரயில்வே வளாகத்தில், பல ஆண்டுகளாக, கோவை அஞ்சல் பிரிப்பகம் செயல்பட்டு வந்தது. இங்கிருந்து தபால்கள் பிரிக்கப்பட்டு, வெளியூர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வினியோகிக்க, மெயில் மோட்டார் சர்வீஸ் (எம்.எம்.எஸ்.,) வாயிலாக, மாவட்டத்தில் உள்ள இரு தலைமை தபால் நிலையங்கள் மற்றும், 68 துணை தபால் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு வந்தன.
கடந்த 8 ஆண்டுகளுக்கு முன், சாதாரண மற்றும் விரைவுத் தபால்கள் தவிர, பதிவுத் தபால்கள் மட்டும், கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள, தபால் நிலையத்துக்கு சொந்தமான இடத்தில் கட்டடம் கட்டப்பட்டு, அங்கிருந்து செயல்பட்டு வந்தன.
தற்போது, கோவை அஞ்சல் பிரிப்பகத்தில் போதிய இடவசதி இல்லாதது மற்றும் எம்.எம்.எஸ்., வாகனங்கள் நிறுத்தவதில் சிரமம் போன்ற காரணங்களால், கோவை அஞ்சல் பிரிப்பகம், கவுண்டம்பாளையம் தேமையன் வீதியில் உள்ள, பார்சல் மையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஆர்.எம்.எஸ்., கோவை கோட்ட கண்காணிப்பாளர் ஜெயராஜ் பாபு கூறுகையில், ''ரயில்கள் வாயிலாக அனுப்பும் கடிதங்கள் மட்டும், கவுண்டம்பாளையம் பகுதியில் இருந்து எம்.எம்.எஸ்., வாயிலாக, ரயில் நிலையம் கொண்டு வரப்படும். இருப்பினும், ரயில் நிலைய வளாகத்தில் உள்ள கட்டடத்தில், தபால் புக்கிங் கவுன்டர், இரவு 8:00 முதல் காலை 8:00 மணி வரை செயல்படும்,'' என்றார்.

