'கோவை டிஜி காப்' செயலி அறிய விழிப்புணர்வு நிகழ்ச்சி
'கோவை டிஜி காப்' செயலி அறிய விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : மார் 17, 2026 04:39 AM
அ நிறம் | அளவு
போத்தனூர்: கோவை போலீசார் அறிமுகப்படுத்திய, Kovai Digi Cop எனும் செயலியின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, பேரூர் சரக டி.எஸ்.பி. சுரேஷ் தலைமையில் கற்பகம் பல்கலையில் நடந்தது.
டி.எஸ்.பி.சுரேஷ் பேசியதாவது:
Kovai Digi Cop- செயலியை அனைவரும் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். தாங்கள் இருக்குமிடத்திற்கு அருகேயுள்ள போலீஸ் ஸ்டேஷன் தொடர்பு எண்கள், ரோந்து பணி அலுவலர்கள் விபரம் அறிய, Hi எனும் செய்தியை அனுப்பினால் போதும். தேவையான உதவி உடனே கிடைக்கும். சந்தேகப்படும் நபர்கள் பற்றி தெரிவித்தால் குற்றங்கள் தடுக்கப்படும். வாகனம் ஓட்டும்போது போக்குவரத்து விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். முக்கியமாக லைசென்ஸ் இன்றி வாகனம் ஓட்டக்கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
