/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேங்காய், வாழைத்தார் ஆனைமலையில் ஏலம்
/
தேங்காய், வாழைத்தார் ஆனைமலையில் ஏலம்
ADDED : மார் 01, 2024 11:23 PM
ஆனைமலை;ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், உரித்த தேங்காய் மற்றும் வாழைத்தார் ஏலம் நடந்தது.
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், இ - நாம் வாயிலாக மட்டை உரித்த தேங்காய் மற்றும் வாழைத்தார் ஏலம் நடந்தது. ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில்முருகன் தலைமை வகித்தார்.
தேங்காய் ஏலத்தில், 26 தேங்காய் மூட்டைகள் வரத்து இருந்தது. அதில், கிலோவுக்கு அதிகபட்சமாக, 28 ரூபாய்க்கு விற்றது. மூன்று விவசாயிகள், இரண்டு வியாபாரிகள் பங்கேற்றனர். 11,724 ரூபாய் மதிப்புள்ள, 7.89 குவிண்டால் தேங்காய்கள் விற்கப்பட்டது.
வாழைத்தார் ஏலத்தில், மொத்தம், 32 வாழைத்தார்கள் வந்தன. கிலோவுக்கு செவ்வாழை, 54 ரூபாய்க்கு விற்றது. மொத்தம், 15,514 ரூபாய் மதிப்பிலான வாழைத்தார்கள் ஏலம் விடப்பட்டது.
ஒவ்வொரு வாரமும் ஏலம் நடப்பதால், விவசாயிகள் இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல், தேங்காய் மற்றும் வாழைத்தார் விற்பனை செய்கின்றனர். ஏலம் முடிந்ததும், வங்கி கணக்கில் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

