/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நல்லாறு திட்டத்துக்கு முதல்வர் உறுதி திட்டக்குழு தலைவர் தகவல்
/
நல்லாறு திட்டத்துக்கு முதல்வர் உறுதி திட்டக்குழு தலைவர் தகவல்
நல்லாறு திட்டத்துக்கு முதல்வர் உறுதி திட்டக்குழு தலைவர் தகவல்
நல்லாறு திட்டத்துக்கு முதல்வர் உறுதி திட்டக்குழு தலைவர் தகவல்
ADDED : டிச 30, 2025 07:31 AM

பொள்ளாச்சி: பல்லடத்தில் தி.மு.க. மகளிரணி மாநாட்டில் பங்கேற்க வந்த முதல்வர் ஸ்டாலினை, கோவையில் உள்ள தனியார் ேஹாட்டலில், திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் பரமசிவம், திட்டக்குழுவினர், பாசன சபைதலைவர்கள், விவசாயிகள் சந்தித்தனர்.
அப்போது, பி.ஏ.பி. கால்வாய்கள் துார்வார, 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ததற்கு நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.
திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் கூறியதாவது:
பி.ஏ.பி. பாசனத்திட்டத்தின் இதயமாக விளங்கும் காண்டூர் கால்வாய் மற்றும் பிரதான கால்வாய்கள் மிகவும் சிதிலமடைந்து, தண்ணீர் விரயமாகிறது. கடைமடைக்கு தண்ணீர் கொண்டு செல்ல சிரமம் உள்ளது.
கால்வாய்களை முழுவதும் சீரமைக்க, கருத்துரு தயார் செய்து, அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு காலதாமதம் ஆகலாம். எனவே, இரண்டு கால்வாய்களுக்கும் சேர்த்து உடனடியாக, 225 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து மிகவும் பழுதடைந்த பகுதிகளை புனரமைப்பு செய்ய வேண்டும்.
ஆனைமலையாறு - நல்லாறு அணைத்திட்டம் செயல்படுத்த இரு மாநில முதல்வர்கள் பேச்சு நடத்தி நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். இதற்கு கால்வாய் புதுப்பிக்கவும், ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என, முதல்வர் உறுதியளித்தார். இவ்வாறு, அவர் கூறினார்.

