/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இணைந்து செயல்பட்டால் மாற்றங்கள் சாத்தியமே! நீர்ப்பாசன அமைப்பு முறை கலந்தாய்வில் தகவல்
/
இணைந்து செயல்பட்டால் மாற்றங்கள் சாத்தியமே! நீர்ப்பாசன அமைப்பு முறை கலந்தாய்வில் தகவல்
இணைந்து செயல்பட்டால் மாற்றங்கள் சாத்தியமே! நீர்ப்பாசன அமைப்பு முறை கலந்தாய்வில் தகவல்
இணைந்து செயல்பட்டால் மாற்றங்கள் சாத்தியமே! நீர்ப்பாசன அமைப்பு முறை கலந்தாய்வில் தகவல்
ADDED : டிச 18, 2024 08:27 PM

பொள்ளாச்சி; தமிழ்நாடு விவசாயிகள் நீர்ப்பாசன அமைப்பு முறை மேலாண்மை சட்டத்தில், விதிகள் திருத்தம் குறித்து மண்டல அளவிலான கலந்தாய்வு கூட்டம் கடந்த, இரண்டு நாட்களாக, பி.ஏ.பி., பொறியாளர் இல்லத்தில் நடந்தது. நேற்றுமுன்தினம், ஆழியாறு நீர்த்தேக்க திட்ட விவசாயிகளுக்கு கூட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து, நேற்று திருமூர்த்தி, அமராவதி, பவானி பகுதி விவசாயிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
நீர்வளத்துறை, மீன்வளத்துறை, வேளாண் விற்பனைத்துறை, வேளாண்துறை, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக்குழு, உள்ளாட்சி அமைப்பைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
நீர்வள மேலாண்மை, நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் (ஓய்வு) கிருஷ்ணன், சிறப்பு தலைமை பொறியாளர் (ஓய்வு) நாகராஜன் ஆகியோர், சட்டம் குறித்தும், சட்ட திருத்தம் குறித்தும் விளக்கி பேசினர்.
அதிகாரிகள் கூறியதாவது:
தமிழ்நாடு நீர்ப்பாசன அமைப்பு முறை மேலாண்மை சட்டத்தில், விவசாயிகள் அமைப்பில் அலுவல்களாக செயல்பாட்டு திட்டத்தை தயாரித்து செயல்படுத்த வேண்டும். நீர்பாசன முறையை பராமரிப்பதற்கான செயல் திட்டத்தை தயார் செய்ய வேண்டும்.
சுழற்சி நீர் வினியோகத்தின்படி, நீரின் பயன்பாட்டை ஒழுங்குப்படுத்துதல், முறைப்படுத்துதல் வேண்டும். ஒதுக்கப்பட்ட தண்ணீரை பயன்படுத்துவதில் சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும்.
தண்ணீர் கட்டணம் வசூலிக்க உதவுவதுடன், நீர் பயன்பாடுகளின் பதிவேட்டை பராமரிக்க வேண்டும். பாசனத்துக்கான நீரோட்டத்தை கண்காணித்தல்; வழக்கமான நீர் வரவு, செலவு திட்டத்தை தயாரிப்பதற்கு பதிவுகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
நீர்ப்பாசன திட்டங்களில் போதிய பராமரிப்பு இல்லாதது; பராமரிப்புக்கு அதிக தொகை தேவைப்படுகிறது. குழு செயல்பாட்டில் உறுப்பினர்களிடையே ஒற்றுமை இல்லை. கால்வாயில் தண்ணீர் கிடைக்காமை, கிடைக்கும் தண்ணீர் மாசுபட்டுள்ளது. நீர் வழங்கப்படும் நேரம் மற்றும் நீரின் தரம் குறித்து உறுப்பினர்களிடையே மோதல்கள் போன்ற பல்வேறு காரணங்களினால், நீரினை பயன்படுத்துவோர் சங்கங்கள் சிறப்பாக செயல்படாததற்கு காரணமாக உள்ளன.
இதுபோன்ற பிரச்னைகளை களைய, நல்ல கட்டுமானம், நீர் பங்கீடு, கடைமடை வரை தண்ணீர் கொண்டு செல்லுதல் மற்றும் நீர்ப்பாசன சபை, நீர்வளத்துறை அதிகாரிகள் குழுவாக இணைந்து செயல்பட்டால் மாற்றங்களை கொண்டு வர முடியும்.
பாசன பகுதிகளின் இடைவெளியை குறைத்து, மகசூல் அதிகரித்தல் வேண்டும். பயிரிடப்பட்ட பகுதிகளின் சரியான மதிப்பீடு, பராமரிப்பு பணிகளை திருப்திகரமாக மேற்கொள்ள வேண்டும். உரிமை உணர்வை விவசாயிகளின் நிலைப்படுத்துதல், அரசாங்கத்துடன் சுமூக தொடர்புகள் வைத்துக்கொள்ள வேணடும்.
நீர்ப்பாசன துறையின் பங்கை மறு சீரமைத்தல், தண்ணீரை சுற்றியுள்ள பல்வேறு குழுக்களை ஒருங்கிணைக்க வேண்டும். இளைய மற்றும் புதிய தலைமைக்கு உதவ வேண்டும்.
இதற்காக நீர்ப்பாசன அமைப்பு முறை மேலாண்மை சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து கலந்தாலோசிக்கப்படுகிறது. அதில், விவசாயிகள் கூறும் கருத்துகளை கேட்டறிந்து உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

